பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் அடிப்படை விதிகள் 6 9.

பிறிதொரு சமயம் அது பொதுக் கருத்தில் செலுத்தப் பெறும். ஆசிரியர் ஒவ்வொரு சிறு பகுதியையும் காட்டிச் செல்லும்பொழுது உளவியல் முறையைப் பின்பற்றவேண் டும்; தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்குப் போவதை மேற்கொள்ளவேண்டும். இறுதியில் சிறு பகுதிகளை யெல்லாம் ஒன்ருக இணைத்து முழுப் பொருளாகக் காட்ட வேண்டும். பொருள்களைப் புரிந்துகொள்வதாலும், அவற் றைச் சிந்தித்தலாலும்தான் அவை மனத்தில் நன்கு பதியும் ; புரிந்துகொள்ளலும் சிந்தித்தலும் மாறி மாறி நடைபெற வேண்டும் என்பது உளவியல் விதி. இப் படியில் கற்பிப் பதில் அழுத்தம் தருதல், திரும்பக் கூறுதல், அக்கறையை உண்டாக்கல், சிந்தனையைக் கவர்தல் ஆகிய கூறுகள் நிறைந்த பயனளிப்பவை. எனவே, படவிளக்கம், ஏனேய துணைக்கருவிகள் முதலியவற்றைத் தாராளமாகக் கையாள வேண்டும். பெரும்பாலும் ஆசிரியர் விரித்துரைத்தலேவிட வினுவிடைகளின் மூலம் மாணுக்கர்களைப் புதிய பாடத்தில் கொண்டுசெலுத்துவதுதான் உற்சாகத்தை அளிக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம். எனவே, இப் படியைப் பாடவளர்ச்சி (Development) என்றும் குறிப்பிடுவது வழக்கம். இச் சொற்ருெடரே சிறந்ததெனத் தோன்று கின்றது.

ஒப்பிடல் (Comparison) : மனம் செய்திகளைத் தனித் தனியாக ஏற்றுக்கொள்வதில்லை. அது பொருள்களின் ஒற்றுமைப் பண்புகளையும் வேற்றுமைப் பண்புகளையும் தனித்தனியாகக் கண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்தறிய முனேகின்றது ; ஒருமையில் பன்மையையும் பன்மையில் ஒருமையையும் காண விழைகின்றது. பொருள்களின் பொதுத் தன்மைகளிலிருந்து ஒரு விதியை, அல்லது மெய்ம்மையைப் பொதுப்படையாக உண்டாக்க எண்ணுகின்றது. மூன்ருவது படியில்தான் இச் செய்கை நடைபெறுகின்றது. கீழ் வகுப்புக்களில் ஆசிரியர்கள் கற்பிக்கும்பொழுது இப் படியை அறவே நீக்கிவிடுகின்றனர். இளம் சிருர்கள் பொருள்களே ஒப்பிட்டுப் பார்த்தும் வேறுவித