பக்கம்:தமிழ் மணம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 தமிழ் மணம் கொண்டே தமிழ்ச் சோற்றினை உண்டு களித்து உடலுரமும் உயிரமும் பெறலாம். ஆனால், இந்த வெறுஞ்சோறு போதுமா? பழஞ்சோறு. புதுச் சோறு, சுடுசோறு. பருப்புச் சோறு வேண்டாமா? அண்டைவீட்டார் அயல்வீட்டார் இல்லையா? தமிழ் மொழி பின் அண்ணன் தம்பிகள் இல்லையா? அக்காள் தங்கையர் இல்லையா? ஊர்நாடு இல்லையா? இந்தியா.இந்தியர்' என்று பல நூற்றாண்டுகளாகப் பேசிவரும் பொதுப்பேச்சு இன்று பொய்யாய்ப் பழங் கனவாய் ஒழியலாமா? இந்த நாட்டில் வாழவேணடும்; பண முக பொருளும் கொடுத்தும் வாங்கியும் வரவேண்டும்: கடலி லும் காற்றிலும் சுற்றிவரவேண்டும். நாம் சுற்றிவரும் இந்தச் சூழலில் எல்லோருடனும் தட்டித் தடுமாறியேனும் பேச வேண்டாமா? எந்தப் பேச்சு பேசுவது? இஸ்லாமியர் இந்துஸ்தானியைத் தமது தாய்மொழி எனப் பாராட்டுகின் றனர். எல்லோருடனும் ஒத்துவாழ விரும்பும் நாம் இந்துஸ் தானியைப் பேசக் கற்றுக்கொள்வது நல்லது. பருப்புச் சோற்றில் நெய்யூற்றியதுபோல அது மணக்கும்; கீழ்நாடுக ளொடு தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பும் உண்டாகும். ஆனால், வடநாட்டினர் தம் தலையை முட்டி மோதி உடைத்துக் கொள்ளும் ஹிந்தி - உருது போராட்டத்தில் புகவேண்டுவ தில்லை.இந்தத துலுக்கு மொழியை ஆங்கில எழுத்தில எழுதிக் கற்றுக்கொள்வதே தமிழருக்கு எளிது. அண்ணன் தம்பிபோல நம்முடன் பழகும் நாயுடுவையும் நாயரையும் இராவையும் மறக்கலாமா? ஓய்விருக்குமானால், மனமிருக்குமானால், அவர்கள் தெலுங்கினையும், மலையாளத் தினையும. கன்னடத்தினையும் கற்றால் குடி முழுகிப்போகுமா? குடியும் முழுகிப்போகாது: தலையும் முழுகிப்போகாது. குடிமுறையும் வாழும்; தலைமுறையும் வாழும். வாணிபம் செய்வோர் இந்த உளவினை அறிவர். தலை என்பதனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/10&oldid=1480324" இலிருந்து மீள்விக்கப்பட்டது