பக்கம்:தமிழ் மணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1. கறியும் சோறும் தெள்ளமுதம் வாய்க்கு விருந்து. தென்றல் உடலுக்கு விருந்து. தமிழ்த் தென்றலோ உள்ளத்திற்கும் உயிருக்கும் விருந்து; உள்ளத்தின் வழியே ஐம்புலனுக்கும் விருந்து. மொழி கேட்பது, காதுக்கன்று; உள்ளத்திற்கே. ஆதலால். விருந்துகளில் எல்லாம் சிறந்தது. மொழிவிருந்தே ஆகும். தமிழ்த தென்றல் அளிப்பது இந்தத் தனிப்பெரு விருந்தே ஆம். விருந்து என்றால், பல சுவைகளும் பழுத்திருக்க வேண்டும். சோறும் ஊறுகாயும் இருந்தால் போதுமா? அது சிறுசோறு. விருந்தென்றால் பெருஞ்சோறாம். என்ன பெருமை? குறுணி குறுணியாகக் கொட்டுவதா? இல்லை, இல்லை. பெருமை எல்லாம், சோற்றோடு கலக்கும் சுவை கனிந்த குழம்பமுது, சாற்றமுது. கூட்டமுது, கண்ணமுது, கறியமுது முதலிய அமுது வகைகளின் பெருமையே ஆம். தமிழ் மொழி விருந்திலும் தமிழ்ப் பெருஞ்சோற்றோடு பிறமொழிக் கறியமுதுகளும் வேண்டும் அன்றோ? தமிழ்ச் சோற்றின் பெருமையைப் பேசவேண்டாம். அதனை உலகம் அறியும்: "நீர் அறியும்; நெருப்பறியும்' என்பர் பெரியோர். ஆங்கில மொழி ஓர் ஊறுகாய் ஆம். அதனைத் தொட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/9&oldid=1480323" இலிருந்து மீள்விக்கப்பட்டது