உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மணம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 101 யானால், கிறித்துவப்பெருமான் பிறந்த முதல் நூற்றாண்டி லேயே மேனாட்டோடும். மேனாடும் அன்று உண்மையறியாது மயங்கிய கிறித்துவ அறவுலகோடும சென்னைக்குத் தொடர் புண்டாகியது எனலாம். தோமையர் இவ்வாறு இங்கு வந் தது அருவநாட்டுத் துறைமுகப் பெருவாய் திறந்து கிடந் தமையாலேயாம். அடையாத பெருங்கதவம் அருவநாட்டின் அழியாத பெருமையாகும். உலகப் பெருவழியாகச் சென்னை விளங்குவது இன்று நேற்று அன்று: இரண்டாயிரமாண்டுக ளாக எனல் வேண்டும். மயிலாப்பூரில் லஸ் சர்ச்' என்று ஓரிடத்தினை வண்டி யில் ஏறிச்செல்வோர் அனைவரும் அறிவா. 'லஸ்' என்றால் ஒளி என்று பொருள்: ஆதலின் அஃது ஒளியம்மைத் திருக் கோயிலாகும். மேனாட்டவர் சிலபல நூற்றாண்டுகளாக முன்னர்க் கீழ்க்கடலில் கப்பலோட்டி வந்தபோது திசையறி யாது திகைத்தனராம். அப்போது இங்கிருந்து ஒரு பேரொளி தோன்றியதாம்; அது கண்டு தரை சேர்ந்து பிழைத்தனராம்: ஒளி தோன்றிய இடத்தில் ஒரு கோயில் ஒளியம்மைத் தாய்க்கு எடுப்பித்தனராம். கலம் கரைவிளக் கம் இன்றன்று ஒளிர்வது: கடவுள் தாயின் கருணை விளக் காகக் காலங் காலமாக ஒளிர்ந்துவருகிறது என்பதாயிற்று. கீழ்க்கடலில் செல்லும் கப்பலைக் காக்க அன்றோ. மணிமேக லைத் தெய்வமும் அருவரொடு தொடர்புடைய நாகர் வழிபடு கடவுளாய்த் தமிழ்க் கடவுளாயிற்று! 4. பல்கலைக் கழகம் பொழுது விடியவில்லை. தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கின்றேன். தூய காற்று வீசுகின்றது. உடம்பெல் லாம் புத்துயிர் பரவுகின்றது. எழுந்து நடக்கலாமென்று தோன்றுகிறது. நேரே நடந்து செல்கின்றேன். கருங்கடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/101&oldid=1481473" இலிருந்து மீள்விக்கப்பட்டது