பக்கம்:தமிழ் மணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 தமிழ் மணம் யிருந்தது என்று கூறவேண்டும். டாலமி (Ptolemy) என் பவர் அந்த நூற்றாண்டில் வாழ்ந்த யவன பூகோள ஆசிரியர். தாம் எழுதிய உலகப் படத்தில் அவர் மயிலையைக் குறித்து வைத்துள்ளார் என அறிஞர்கள் கருதுகின்றனர். இப்போது சென்னை இருக்கும் இடத்தில் அவர் தம் படத்தில் "மல்லியர் பா" என்ற பெயரை ஒரு துறைமுகத்தின் பெயராக எழுதி வைத்துள்ளார். "ம் அ (ல்)ல் இய் அர்ப் ஆ" என்ற எழுத் துக்களை 'ம் அய் இல் ஆப் ஊர் என இடம் மாற்றி எழுதி யதையும் இந்நாளைய மயிலா(ப்)பூர் என்ற பெயர் வருவது ஒரு வியப்பே. கடைசியில் ஊர் என்பது யவனர் காதில் ஆ' என விழுந்திருத்தல் வேண்டும். உற்றுக் கேளாமையா லும், மொழியை அறியாமையாலும் நேர்ந்த எழுத்துப் பிறழ்ச்சியே இஃது என்பது தெளிவாகிறது. தரங்கம்பாடி ட்ராங்க்பார் எனத் தமிழறிந்தார் வாயிலும் புரளும்போது. யவனர் அந்நாளில் எழுத்துப் புரட்டி எழுதியது பெரிய தவறாகாது. இந்த மயிலாப்பூர் மற்றொரு வகையிலும் மேனாட்டில் புகழ்பெற்றுள்ளது. ஏசுநாதரின் அடியாரான ஸென்தோம் என்ற தோம் ஐயர் அடிகளார் இந்தியாவிற்கு வந்து தம் அறவுரைகளை இந்தச் சென்னை மக்களிடையே வழங்கி னாராம். ஸென்தோம் என்ற தோம் ஐயர் கோவில் இதனை இன்னும் சினைப்பூட்டுகின்றதாம். மயிலையில் அன்றோ. தோமையர் கோயில் இன்றும் கடலருகே நின்று நிலவு கிறது? பகைவர் கையில் சிக்கித் தோமையர் உயிர்விட்டுச் சமாதி கூடிய இடங்களும் இதற்கு அருகே உள்ளன. பரங்கி மலையைச் சார்ந்த சிறுமலையும் பெருமலையும் தோமையர் கோவிலுக்குப் பெருந்தொலைவில் இல்லை. இவையே அப் பெரியார் சமாதி கூடிய இடம் எனக் கிறித்துவர்கள் இன்றும் காட்டி, ஆண்டுதோறும் திருவிழாக் கொண்டாடி அடிகளார் நினைவை விலைகாட்டிவருகின்றர்கள். து உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/100&oldid=1481472" இலிருந்து மீள்விக்கப்பட்டது