பக்கம்:தமிழ் மணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 99 கொழுமையையுங் கண்டு சோழப் பெருமக்கள் காதலித் தனர் என்று முன்னர்க் கண்டோம். சோழர் திரையரொடு கொண்டும் கொடுத்தும் வாழத் தொடங்கினர். நாளடைவில் தாண்டையர் தம்மைச் சோழரென்றே எண்ணலாயினர். திரையருக்குக் கிழக்கிந்தியத் தீவுகளில் வாழ்ந்த நாகருடைய தொடர்பும் உண்டு. பலரோடும் கலந்து வாழும் பணபாடு அருவநாட்டாரோடு கூடப்பிறந்ததாகும். இளந்திரையன், காஞ்சிமா நகரில் ஆண்ட பெருமையைப் பெரும்பாணாற்றுப் படை பாடுகிறது. திரையர் சிறப்பினையும், வேங்கடத்தின் நின்றும் பரவிய தொண்டையர் கொடையினையும் சங்கப் புலவர் மறவாது போற்றிப் புகழ்ந்துள்ளனர். பல்லவனுக்கு மயிலைக்கோன் என்பது ஒரு சிறப்புப் பெயர். இது மல்லைகோன் என்பதுபோலப் போற்றப் பெறும் ஒரு பெயர். மல்லை என்ற மஹாபலிபுரமே தலை நகரமான காஞ்சியின் துறைமுகமாகும் எனக் கி.பி. ஆறாம் நூற்றாணடின் முற்பகுதியில் இங்கு வந்து சென்ற ஹியூங் சாங் என்ற சீனப் பெரியார் எழுதிவைத்துள்ளார். பல்லவர் வடக்கிருந்து தென்பகுதியிற் சென்றனராம். அருவர் நாடு இரு பகுதியின் பழம்பகுதி போகப் புதுப்பகுதியின் தலைவர் மல்லையோடு சேர்ந்தவர் எனக் கூறலாம். துறைமுகம் நாட் டிற்கு வாயிலேபோல விளங்கியதால், பல்லவனைத் துறை முகங்களையொட்டி மயிலைக்கோன், மல்லைக்கோன் எனப் புகழவந்தனர் எனத் தோன்றுகிறது. பல்லவர் சிறந்தது சங்ககாலத்திற்குப் பின்னே என லாம். அவர்கள் ஓ என வாழ ஓங்கியது கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே ஆகும். இந்தப் பல்லவர் காலத்திற்கு. முன்னும் சென்னை சிறந்திருந்தது என்று அறுதிகூற இடம் உண்டு. இங்கே மயிலாப்பூர் என வழங்கும் மயிலை அன்றும் பெருமைபெற்றுத் திகழ்ந்தது. குறைந்தது கி.பி. இரண் டாம் நூற்றாண்டிலேனும் அதன் பெருமை மேனாடுவரை எட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/99&oldid=1481483" இலிருந்து மீள்விக்கப்பட்டது