பக்கம்:தமிழ் மணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 தமிழ் மணம் கெல்லாம் காக்கின்ற பெருமான் கழற்சிங்கன் என்று சுந் தரர் பாடிய கடலரசர்பெருமான் ஒரு பல்லவன். பல்லவர் அருவ நாட்டுப் பெருமக்கள் என முன் கண்டோமாதலின். கழற்சிங்கன் சென்னை நாகரிகத்தை வளர்த்த அருவனாம். தமிழனே ஆம். அரிக்காமேடு புதுவைக்கருகே யவனர் குடியாக விளங்கி யது எனக் கண்டோம். கடலரையர்களான அருவா நாட்டா ரோடு யவனர் நட்புப் பாராட்டியது இயற்கையேயாம். எயிற்பட்டினம் என மற்றொரு துறைமுகத்தைப்பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. இது புதுவையா? அரிக்காமேடா? சதுரங்கப் பட்டணமா? இந்த ஊர்கள் இருக்கும் இடத்தே தான் எங்கேயோ அந்த எயிற்பட்டணம் இருத்தல்வேண் டும். மாமல்லை என்பது பல்லவரது மற்றொரு துறைமுகம். இதுவே பின்னாளில் மஹாபலிபுரம் எனச் சிறந்தோங்கியது. இடை க்கழி நாடு, உள்ளூர்களிடையே கழிவழியே படகோட்டி வாழ இடந்தந்தது. திருஇடந்தை, திருவான்மியூர், திரு மயிலை. திருவொற்றி என்பவை திருமலையைத் தொடர்ந்து கடலருகே விளங்குகின் றன. இந்தக் கோயில்களின் அமைப்பை நோக்கும்போது கடலருகே அருவநாட்டுப் பெரு வழியொன்று அந்நாளில் இந்த ஊர்கள் வழியே கடலை யொட்டி ஓடியது என்பது விளங்குகின்றது. கடலருகாக அருவர் அருவகாட்டில் பரந்து சென்றுவந்தனர் போலும்! கடலருகே வாழவந்த காடுவெட்டிகள் கடலுழுது கப்ப லோட்டி வாழ முற்பட்டது அவர்களது இரண்டாம் திருவிளை யாடல் எனலாம். திரைகடலோடித் திரைமீது தவழ்ந்து விளையாடிய இந்த மறவர்கள் திரையர் எனப் பேர்பெற் றனர். தொண்டையர், பல்லவர். காடுவெட்டிகள். காடவர், திரையர் என்று அருவதாட்டுப் பெருமக்கள் பலபேர் பெறு வர். அருவர் நாடே திரையர் நாடு: அருவர் நாடே தொண்டை நாடு. தொண்டை நாட்டுக் காட்டின் செழுமையையும் கடலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/98&oldid=1481471" இலிருந்து மீள்விக்கப்பட்டது