பக்கம்:தமிழ் மணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 97 இடத்தினைத்தான். எனவே, கோட்டை நாகரிகத்திற் சிறந்த மக்களிடையே, அந்தக் காவல்நிழலில் பல்லாயிரம் காதங் களுக்கு அப்பால் வாழ்ந்த யவனர்களும் வந்து குடியேறி வாணிகம் செய்தார் என்பதாயிற்று. 3. கப்பலோட்டிய நாகரிகம் சென்னை இன்று பெரிய துறைமுகமாக விளங்குகிறது. கலங்கரை விளக்கம், காரிருளில், காலம் எல்லாம் களிப்புடன் சுழன்று சுழன்று கப்பல்களை 'வா, வா' என்று கண்ணாலும் கையாலும் அழைத்துக்கொண்டே இருக்கிறது. பொருள்கள் கப்பலேறிக் கடலுழுது வருகின்றன; போகின்றன. பல வகை மக்கள்: பலவகைப் பேச்சு; பலவகை நடை: பலவகை உடை; பலவகைப் பணம்! ஆந்திர கண்பர்கள் இதனைக் கண்டு மயங்கித் தங்கள் விசாகப்பட்டணத்தின் பெருமையையும் மறந்து இதனைக் கைப்பற்ற முயலுவதில் வியப்பொன்றும் இல்லை. "கப்பலோட்டிய தமிழன்" என வ. உ. சிதம்பரம் பிள்ளையை விடுதலை வீரத் திருநாளில் நினைந்து நினைந் துருகிப் போற்றினோம். 'கப்பலோட்டிய தமிழன்" என் பதே எந்த நாளிலும் தமிழனது தனிச்சிறப்பு. Rice என்ற சொல்லை வேரூட்டிற்குச் சோறூட்டிக் கற்றுக்கொடுத்த 2000 ஆண்டுகளுக்குமுன கப்பலில் அரிசி ஏற்றிச் சென்ற வன் 'அரிசி' எனப் பேசும் தமிழனே : எகிப்து நாட்டில் உள்ள பட்டடைக் கோபுரங்களில் உள்ளிருக்கும் தமிழ்நாட்டுத தேக் கினைக் கப்பலில் ஏற்றிச் சென்று ஊற்றம் கொடுத்தவன் தமிழனே; கிழக்கிந்தியத் தீவுகளில் கப்பலிற் சென்று பழகி யவனும் தமிழனே; தமிழ்நாடு அத் தீவுகளிலும் செங்கோல் செலுத்த வழிகோலியவனும் தமிழனே, "கடல்ருழ்ந்த உல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/97&oldid=1481470" இலிருந்து மீள்விக்கப்பட்டது