பக்கம்:தமிழ் மணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 தமிழ் மணம் யும் சோழர்கள் எனவே புகழ்ந்துகொண்டனர் எனப் பத்துப் பாட்டிலிருந்து அறிகின்றோம். சென்னையின் இந்நாளைய நாகரிகப் பெருமை அதன் கோட்டைவழியே எழுந்தது ஒன்றாகும். அருவர் நாட்டின் பழம்பெருமையும் கோட்டைவழியே எழுந்து ஓங்கிச் சிறந் ததுதான் இங்குள்ள வியப்பு. தொண்டைநாடு, காட்டு நிலைமை மாறி நாட்டு நிலைமை எய்தியதும் இருபத்துநான்கு கோட்டங்களாகப் பிரிந்தது. கோட்டம் என்பது கோயில் என்று பிற்காலத்தே பொருள் பெற்றது. கோயிலும் கோட்டையாக அமைந்ததாலேயே இந்தப் பொருளும் எழுந்தது. கல்லிடு பதுக்கை ஒரு மாயவட்டம்; கடவுள் தன்மை சான்றது: காவல் நிறைந்தது. இந்த நம்பிக்கை வளர வளர எல்லைக் கற்களை நட்டுக் கோட்டைகளை அமைக் கத் தொடங்கினர்; அவை காட்டில் பகைவர் கையில்நினறும் தப்பீப் பிழைப்பதற்கு நல்ல வழியாக இருத்தலையும் உணர்ந்தனர். காட்டில் இத்தகைய காவல் இன்றியமை யாது வேண்டும் அன்றோ? அருவர் என்ற பெயரில் அர் என்ற பகுதியே அடிப் படை. ஆர்எயில், ஆர்க்காடு. அரண், அரையர் (அரியர். ஆரியர்), அருப்பம் முதலியன. இந்த அருவர். கோட்டை கட்டி வாழ்ந்து நாகரிகத்தினை வளர்த்தனர் என்பதனை இன் றும் நிலைநாட்டுகின்றன. அர்க்காமேடு என்பது புதுச்சேரி யின் அருகேயுள்ள இடம். இதனை இரண்டாண்டுகளுக்கு முன்னே ஆராய்ச்சியாளர் தோண்டிப் பார்த்தனர். அது யவனர் குடியிருந்த இடம் என்பது தெளிவாயிற்று. அர்க்கா மேடு என்பது அருவர் மேடு என்பதன் வேற்று வடிவம் போலும்! அருவரது பூங்காவனம் மிகுந்த இடம் எனப் பொருள்படுமாறு அருக்காமேடு (அரிககாமேடு) என்றும் வழங்கி இருக்கலாம்! மேடு எனப் பிற்காலத்தார் வழங்கியது பழைய கோட்டையும் ஊரும் மணல்மேடிட்டுப் பாழாய் நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/96&oldid=1481469" இலிருந்து மீள்விக்கப்பட்டது