பக்கம்:தமிழ் மணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 95 இகழ்ந்த அரவம் மொழி பேசும் திருவல்லிக்கேணி சென்னை யைச் சேர்ந்ததேயாம். அருவர் நாட்டினை ஆந்திரர்,ஆந்திர நாடு எனக் கூறு வது எப்படிப் பொருந்தும்? இந்த அருவர் நாடு அந்நாளில் பெருங்காடாகக் கிடந்ததாம். இதனைத் தண்டகாரணியம் என இராமாயணம் பேசுகிறது. ஆர்க்காடு. ஈக்காடு. பழ வேற்காடு, ஆலங்காடு. திண்டிவனம். செங்காடு, ஊற்றுக் காடு, இளங்காடு முதலியன இந்த அருவா நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள். அருவா நாடு காட்டரணாற் பொலிந் தது என்பதற்கு இவையே சிறந்த சான்றுகளாம். யானை யும் புலியும் விரும்பியபடி திரிந்த காடுகளாகும் இவை. புலி யூர். இரும்புலியூர் என வழங்கும் பல ஊர்கள் இந்த அருவா நாட்டில் உள்ளன. மறக்குடியிற் சிறந்த அருவர். புலி வேட்டையாடிக் காடு திருத்தி நாடாக்கி நாகரிகத்தினை வளர்த்த பெருங் கதையினை இந்த வீரப் பெயர்களே இன் றும் நமக்கு நினைப்பூட்டுகின்றன. காடு வெட்டித் திருத்திய பெருமக்களைக் காடுவெட்டிகள் எனத் தமிழர் புகழ்ந்தனர். காட்டில் வாழ்ந்த பெருமையைப் பாராட்டிக் காடவர் என்றும் அவர்களைத் தமிழரனைவரும் பாராட்டினர். தொண்டையர்கள் என்ற பல்லவர்கள் இந்தக் சிறப்புப் பெயர்களைத் தங்கள் கல்வெட்டுக்களில் செதுக்கி வைத்துப் போயிருக்கின்றனர். கரிகாற் பெருவளத்தான் என்ற சோழர்பெருமான் இவ்வாறு இந்தத் தொண்டை மண்டலத்தினைச் சீர்ப்படுத்தினான் என்று தமிழ்ப் பாட்டுக் களும், கல்வெட்டுக்களும் பல நூற்றாண்டுகளாகப் புகழ்ந்து வந்திருக்கின்றன. அவ்வாறு திருத்தப்பெற்றபோது தமிழ் நாட்டின் மேற்குப்புறத்திலுள்ள துளு நாட்டிலிருந்து தாங் கள் இங்குக் குடியேறினவர் என்று தொண்டைமண்டலத் துத் துளுவ வேளாளர் பெருமை பேசிக்கொள்கின்றனர். நாளடைவில் தொண்டையர்கள் சோழர் உறவால் தம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/95&oldid=1481468" இலிருந்து மீள்விக்கப்பட்டது