பக்கம்:தமிழ் மணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 தமிழ் மணம் தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று அன்றுமுதல் இன்று வரையில் தமிழர் வழங்கிவந்துள்ளனர். அவற்றில் அருவா நாடு. அருவா வடதலை நாடு என்பவை தமிழ்நாட்டின் வட பகுதியாக அமைந்தவை. இவை, அருவர் நாடு, அருவர் வடதலை நாடு என வழங்கினபோலும்! பழம்பாலாற்றின் பின்னர்ப் புதுப்பாலாறும் சிறந்து விளங்கியது. அந்நாளில் அந்த ஆற்றங்கரையிலும் மக்கள் வாழத் தொடங்கினர். செங்கற்பட்டு, வடஆர்க்காடு என்ற நிலப் பகுதிகள் வளங் கொழிக்கத் தொடங்கின. சென்னை அல்லது பழைய பாலாற் றங்கரை அருவரது பழைய நாகரிக ஊற்றாகவும், புதிய பாலாற்றங்கரை அருவரது புதிய நாகரிக ஊற்றாகவும் அமைந்தன எனலாம். இந்த இரண்டும் அருவர் நாடு எனச் செழித்தன. இவற்றிற்கு வடபுறத்தும் அருவர் பரவினர். ஓர் இயற்கை எல்லை எதிர்நின்று தடுக்கும்வரை மக்கள் பரவு வது இயற்கைதானே! திருவேங்கடமலையும், வடபெண்ணை யாறும் தோன்றித் தடுக்கும்வரை அருவர் வடக்கிலும் சென்று குடியேறினர். இந்தப் புதிய குடியேற்ற கட் டினையே அருவர் வடதலை நாடு என மக்கள் வழங்கலாயினர். இந்த அருவர் பேசிய கொடுந்தமிழிற்கே. வடுகர். அர வம் எனப் பெயரிட்டனர். அதுவே தமிழுக்கு அவரிடும் பெயருமாயிற்று. அரவம் என வழங்கும் கொடுந்தமிழின் இயல்பினைப் பழைய இலக்கண ஆசிரியர்கள் எடுத்துக் காட்டுக்களால் விளக்கியுள்ளார்கள். கேணி என்றால் தமிழ் நாட்டுப் பிற பகுதிகளில் கிணறு என்றே பொருள். ஆனால். அருவா நாட்டார் குளத்தினையே கேணி எனறு வழங்கி வந்தனராம். இதற்கேற்பப் பார்த்தசாரதியார் கோயில் எதி ரில் உள்ள குளம் திருவல்லிக்கேணி என்று பெயர் பெற் றுள்ளது. இந்தக் குளத்தால் அன்றோ அந்த ஊரும் இன்று வரையில் திருவல்லிக்கேணி எனப் புகழ்பெற்று விளங்கு கிறது! தம் ஆந்திர மொழியினும் வேறு மொழி என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/94&oldid=1481467" இலிருந்து மீள்விக்கப்பட்டது