பக்கம்:தமிழ் மணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 93 வேலைத் திறத்தையும் நன்கு விளக்குகின்றன. சென்னைக் கண்காட்சி நிலையத்தில் (மியூசியம்) இவற்றை இன்றும் காணலாம். கற்களைக் கருவியாகத் திருத்தி அமைத்த மக்கள் நாளடைவில் இரும்பு செம்பு முதலியவற்றை அறிந்து அவற்றால் கருவிகளைச் செய்யக் கற்றுக்கொண்டனர். இவ் விருப்புக்கால மககளே சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் புதையுண்டு கிடக்கும் மக்கள் என ஆராய்ச்சியாளர் முடிவு செய்துள்ளனர். இந்தப் பழங்கால மக்களின் வரலாறு முழு தும் ஆராயப்பெறாமல் அரைகுறையாகவே இருக்கின்றது. ஆனால், பழம்பாலாற்று நாகரிகத்தின் உயிர்நிலையாய்ச் சென்னையும் அதன் சுற்றுப்புறமும் மூன்றாம் ஊழி தொடங் கிச் செழிக்கத் தொடங்கியது என்பதில் ஐயமிருப்பதற் கில்லை. 2. கோட்டை நாகரிகம் பழம் பாலாற்றங்கரையில் வாழ்ந்த மக்கள் சங்ககால மக்களுக்குப் பாட்டன்மாரும் பூட்டன்மாருமாவர் என்பதனை முதுமக்கட்டாழிகளும், கல்லிடு பதுக்கைகளும் நிலைநாட்டுகின். றன. எனவே, தமிழர்கள் இந்நாட்டுப் பழங்குடிகளே அன்றி, இங்கு வந்து குடியேறின புதுக்குடிகள் அல்லர். இவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் சென்று குடியேறின வரலாறு. கட்டுக்கதைகளைவிட மிக்க வியப்பினைத் தருவது என அறிஞர்கள் கருதுகிறார்கள். தொல்காப்பியர், தமிழ்நாட் டனைத்திற்கும் பொது வான செந்தமிழினைப்பற்றியும், தமிழ்நாட்டின் பல பகுதி களிலும் இதற்குச் சிறிது வேறாக அங்கங்கே வழங்கிய கொடுந்தமிழினைப்பற்றியும் பேசுகிறார். இத்தகைய கொடுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/93&oldid=1481466" இலிருந்து மீள்விக்கப்பட்டது