பக்கம்:தமிழ் மணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 தமிழ் மணம் வளர்வது வழக்கம்! சென்னைக் கீழ்ப்பாக்கம் பழங்கால மக்க ளது இடுகாட்டினை இன்றுவரையில் காத்துவந்துள்ளது. இடுகாட்டில் புதையுண்ட மக்களுடைய தலையோடுகள். அவர் கள் ஆண்ட தட்டுமுட்டுக்கள் முதலியவற்றை ஆராய்ந்தே அவர்கள் நாகரிகத்தினை உலகம் அறிந்துவருகிறது. மக்கள் குகையில் வாழ்ந்த காலமும் உண்டு. அத்தகைய குகைகள் இங்கே அலிகூடு மலையருகே உண்டு. பின்னர்க் கல்லால் வாளும் வேலும் கத்தியும் பிறவும் செய்து அவர்கள் வாழ்ந்துவந்தனர்: கற்கால மக்கள் என இவர்களை வழங்கு வர்.கல்லாலான கருவிகள் முதலில் கரடுமுரடாக இருக்கும். அந்தக்காலத்து மக்களே பழங் கற்கால மனிதர்கள். பின்னர்க கற்கருவிகள் அழகிலும் சிறந்து நின்றன; திறமையிலும் சிறந்து நின்றன. இந்தக் காலத்து மக்களே புதுக் கற்கால மக்கள். பழங்கால மக்கள் இறந்தோரைக் கல்லிட்டு மூடிக் கல்லை. வலையமாக வைப்பது வழக்கம். இவைதாம் பின்னர்ப் பள்ளிப்படைக் கோயில்களாக வளர்ந்தன எனலாம். பழங் கற்காலத்து வழக்கமான இந்தக் கல் எடுப்பு, சங்க காலத்தும் பாலைநிலத்து மக்களிடத்தே வழங்கியது என அறிகிறோம். 'கல்லிடு பதுக்கை' என்பது சங்க நூலில் கண்ட வழக்கு. மண்ணால் செய்த பெரிய சால்களில்,இறந் தோரை அடைத்துப் புதைப்பது ஊர்களில் வாழ்ந்த மக்க ளின் பழக்கம்: இதுவும் கற்கால மக்களின் வழக்கமே. இத் தகைய சால்களுக்கு 'முதுமக்கள் தாழி' என்பது பெயர். சங்க காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது. பழம் பாலாற் றங் கரையில் வாழ்ந்த கற்கால மக்களிடையே இருவகை வழக்கமும் இருந்தன. கூடுவாஞ்சேரி, பெரும்பெயர், ஆதித்தநல்லூர்.சத்தியவேடு, பெரியநத்தம் என்று சென்னை யைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள கல்லிடு பதுக்கை களும் முதுமக்கட்டாழிகளும் அந்நாளைய மக்களுடைய குய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/92&oldid=1481465" இலிருந்து மீள்விக்கப்பட்டது