பக்கம்:தமிழ் மணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15.சென்னை நாகரிகம் 1. இருப்புக்கால மக்கள் நிலமகள் நேற்றுப் பிறந்த சிறுமி அல்லள்; காலம் கண்ட கிழவி. அவள் சூரியனோடு ஒட்டிச் சுழன்ற காலமும் உண்டு; சுழன்ற சுழறசியில் பிய்ததுப்போன காலமும் உண்டு; அன்று பிரிந்த நிலையில் இன்றும் அழியாத அழ கோடும் சூரியனைச் சுற்றிவருகிறம், நீப்பிழம்புரய்த் திகழ்ந்து எரிந்தவள் சிறுகச் சிறுகக் குளிர்ந்து நீராய்த் தரையாய் மலையாய் மணலாய் மாறிச் செடியும் கொடியும் பலவகை உயிர்களும் வளர்ந்து வாழ இடங்கொடுக்கும் சிறந்த தாயாகி விளங்குகிறாள். நிலமகளுக்கு முதலூழி, இரண்டாம் ஊழி, மூன்றாம் ஊழி எனப் பலகாலம் கடந்தபின் அவளுடைய ஒரு கூறாகத் தோன்றிக் காட்சியளித்த தரைப் பரப்பினையே (Post Ter- tiary Period) சென்னையைச் சுற்றிலும் பார்க்கின்றோம். பல்லாவரம் மலை அந்நாளைய பழைய மலை. சென்னைக்கு அருகாக வடபுறத்தில் அந்நாளில் பேராறு ஒன்று ஓடிய தாம். குடதலையாறு. கூவம் முதலியவற்றை இன்றும் பழம் பாலாறு (விருத்த க்ஷுர நதி) என மக்கள் பேசிவருகின் றனர். திருமுல்லைவாயில் பாலாற்றங்கரையில் இருந்ததாகச் சுந்தரர் பாடுகின்றார். அந்தப் பழம்பாலாறு சுற்றுப்புறத்து மலைகளின் நீரை எல்லாம் கொண்டு ஒருகாலத்து ஓடியது போலும்! பின்னே, பல பல காட்டாறுகளாகவும் கல்லாறுக ளாகவும் கூவம், அடையாறு முதலிய சிற்றாறுகளாகவும் மாறி மறைந்ததுபோலும் இந்தப் பழம்பாலாற்றங் கரையில் மக்கள் வாழ்ந்தனர். ஆற்றங்கரை யோரமாக அன்றோ நாகரிகங்கள் செழித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/91&oldid=1481484" இலிருந்து மீள்விக்கப்பட்டது