பக்கம்:தமிழ் மணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 103 திருவள்ளுவரை ஏலாசாரியார் என்ற சைனப் பேரா சிரியரென சமணப் பெரியோர் பாராட்டுகின்றனர். சைனப் பெரியோர்களின் அறப்பள்ளியாகவும் திருமயிலை விளங்கி யது. சமணர்கள். தமக்குப் பெருவழி காட்டித்தந்து கடவுள் தன்மை பெற்ற பெருமக்களை இருபத்துநால்வர் என எண்ணி அவர்களைத் தீர்த்தங்கரர் எனப் போற்றி வருகின் றனர். அவர்களில் நேமிநாதர் என்பாரும் ஒருவர். அமண மாய் நின்ற சமணச் சிலையில் செதுக்கியுள்ள ஆழிகொண்டு இந்த நேமிநாதரின் உருவத்தினைப் பிரித்தறியலாம். இந்தப் பெரியாரின் திருக்கோயில் திருமயிலையில் பேரும் புகழும் பெற்று ஓங்கியது. திருமயிலையில் கோயில்கொண்ட இந்தப் பெருமையால் நேமிநாதரது பெயரே மயிலைநாதர் எனத் தமிழரிடையே வழங்கலாயிற்று. 14-ஆம் நூற்றாண்டுவரை இந்தச் சிறப்பு மறையவில்லை என்பது தெளிவாகிறது. அந்த நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் பெரியாரின் பெயர் மயிலைநாதர் என்பதாம். இவர்தாம் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர். சமணப்பள்ளிகளும், புத்தப்பள்ளி களும் பல்கலைக் கழகங்களாகத் திருமயிலையில் வளர்ந் தோங்கித் தமிழை வளர்த்த பெருங்கதையினைத் தமிழன் மறக்க முடியாது. இவற்றை எல்லாம் எண்ணிக்கொண்டே வரும்போது ஒரு புதிய கருத்து மின்னல்போல் திடீரென விளங்குகிறது. அருவர் நாட்டு அருவரைப்பற்றியன்றோ பேசி வருகின்றோம்? தொல்காப்பியத்தில் முக்காலமும் அறிந்த அறிவரைப் பற்றிக் கேட்டுள்ளோம். முனிவர் என்று ஒருசில ஆசிரியர் அறிவரைக் கூறுவர்; வானத்தினை நோக்கி வான்மீன்களை அராய்ந்து காலத்தை வரையறுத்து மழை வரும்- வெயில் வரும்' என்றெல்லாம் கணக்கிட்டுக் கூறும் வான நூலாசிரியர் என்று வேறு சிலர் கூறுவர். அருவர் என்ற சொல்லும் அவர்கள் அறிவாராய்ச்சியும் இந்த 'அறிவரை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/103&oldid=1481475" இலிருந்து மீள்விக்கப்பட்டது