பக்கம்:தமிழ் மணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 தமிழ் மணம் நினைப்பூட்டுகின்றன. கண்மூடிக் கனவு கண்டு கடவுளையும் உலகினையும் பற்றிக் கண்ட உண்மைகளைக் கூறும் பெரியார் ஒருபுறம்; அவ்வாறு உள்ளுக்குள்ளேயே ஒளிந்து கொள்ளா மல் வெளியுலகில்கூட வாழ்ந்து கண்ணைத் திறந்து அனைத் தினையும் ஒன்றுவிடா தாராய்ந்து உயர ஒளிரும் வான்மீன் களையும் எண்ணிப் பார்த்து அவற்றிற்கும் அவ்வப்போது தோன்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பினை உய்த்தறிந்து உண்மை கூறுவோர் மற்றொருபுறம். இன்றைய விஞ்ஞானப் பெரியோர் இந்தப் பின்னினத்தைச் சேர்ந்தவரே. அறிவரும் அருவரும் இந்த இனத்தினையே சேர்ந்தவர் எனலாம். கண்ணாற் கண்டதனைக் கண்மூடியும் கண்டு, கருத்தினைத் திருத்தமாக உருப்படுத்தி உண்மையுணர்ந்து உலகிற்கு உதவுவார் ஆதலின் முன்னினத்தின் உயர்வும் இங்கு உண்டு. அருவர் நாடு அறிவர் நாடே ஆம். இதனை நிலைநாட்ட எதிர்பாராத மற்றோர் இடத்திலிருந்து அரிய சான்றுகள் கிடைக்கின்றன. அருவர் நாடு என்பதே தொண்டை நாடு எனக் கண்டோம். இந்தத் தொண்டை நாடு காடாக இருந்த கதையும் நாம் முன் கண்டதேயாம். இந்தக் காட்டினைத் தண்டகாரணியம் என இராமாயணம் பேசுவதும் நாம் அறிந்ததொன்றேயாம். இந்தக் காட்டில் ஆங்காங்கே அறி வர் அல்லது முனிவர் தனித்தனியே அறப்பள்ளி அமைத்துக் கொண்டு தம்மைச் சூழ்ந்துநின்ற இளைஞருக்கு அறிவு ஊட்டி வந்தனர் என்பது இராமாயணத்தின் அடிப்படை. அவரைக் காக்க அன்றோ இராமன் தன் வாயை விற்றுவிடுகின்றான்? அந்த அறிவரின் தலைவர் அகத்தியர்; அவர் அன்றோ இராம னுக்கு வில்லும் உதவுகிறார்? அகத்தியர் தமிழ்முனி என்ப தனை உணர்ந்தால் இந்தக் குறிப்புக்களின் நுட்பம் நன்கு விளங்கும். வரலாற் றாாய்ச்சியாளர் ஒருவர் இந்தத் தவப் பள்ளிகள் அந்த அந்த முனிவர் நடத்திவந்த பல்கலைக் கழகங் களே என முடிவு கட்டியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/104&oldid=1481476" இலிருந்து மீள்விக்கப்பட்டது