பக்கம்:தமிழ் மணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 105 பல்கலைக் கழகம் என்றால் பல கட்டடங்களும் பலபல பொருள்களும் நினைவிற்கு வருகின்றன. இவை எல்லாம் இல்லாதபோது பல்கலைக் கழகம் எனப் பேசுவது பலருக்கும் நகைப்பினையே விளைக்கும். நம் கல்வி ஆராய்ச்சி, கல் ஆராய்ச்சியாக முடிந்துள்ளது. மூளையும் கல்லாய்ப் போவது தான் இந்த ஆராய்ச்சியின் முடிவு. கட்டடம் முதலியன புறக்கோலங்களே. நாம் அகக்கோலத்தினையே நாடவேண் டும். அறிவு விளக்கமே அகக்கோலம். பேராரவாரப் பெருங் கட்டடப் பெருங்கோலப் பெரும்பணப் பெருந்திருமேனிப் பெரும்பொலி வெல்லாம் வெளிமினுக்கே. நம் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சியுரைகள் பல காணோம் என்று பல ரும் கையை முறித்துக்கொள்கிறார்கள். பழங்காலத்தில் வெட்டவெளியில் வான்மீன்களின் ஒளியில் இரவெல்லாம் ஆய்ந்தனர்; கதிரவனோடு உடனோடுவதுபோல அறிவு கொண்டு உலகெல்லாம் உள்ளத்தினை ஓடவிட்டுப் பசுமரத் தடியில் அமைதியாய் நின்று அனைத்தினையும் ஆராய்ந்தனர். பெண்ணும் ஆணும் வாழுவது எப்படி? அரசியலை அமைப் பது எப்படி? என்று படிப்படியாகச் சென்று கடவுளையும் விடாத பெரும்பிடியாகப் பிடித்து ஆராய்ந்தனர். இயற்கை யோடு இயற்கையாக வாழ்ந்தாலன்றோ அறிவு வளரும்; விஞ்ஞானம் வளரும்; கலை வளரும்: கல்வி வளரும்:களிப்பு வளரும்; களிப்பில் பாட்டு வளரும். இந்த உண்மையினைக் கண்டு இரவீந்தரரும் தம் விசுவபாரதி என்ற பல்கலைக்கழகத் தினைப் பழமைபோல இயற்கைத் தாயின் மடிமீது தவழ்ந்து விளையாட விட்டுள்ளார். ஆதலின் குடிசைக்குக் குடிசை பல்கலைக்கழகம் வளர்ந்தது என்று கூறுவதில் தவறில்லை. காடான காலத்திலும் இவ்வாறு அறிவர் நாடாகச் சிறந்த அருவர் நாடு. நாடான காலத்தில் உண்மைப் பல் கலைக் கழகமாக வளர்ந்து பரவுவதனைச் சொல்லவேண்டுமா? தொண்டைநாட்டில் காஞ்சிபுரம் இவ்வாறு தலைசிறந்து 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/105&oldid=1481477" இலிருந்து மீள்விக்கப்பட்டது