பக்கம்:தமிழ் மணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 தமிழ் மணம் விளங்கியது. இந்தியாவில் அந்நாளில் விளங்கிய ஏழு அறிவு நிலையங்களில் இதுவும் ஒன்று என ஓங்கியதோடு. இது காரணமாக நகரமென்றால் காஞ்சி (நகரேஷு காஞ்சி)யே என வடமொழியாளரும் புகழ்ந்து பாராட்டுமுறையில் சிறந் தெழுந்தது. நம் நாட்டுக் காப்பியமான மணிமேகலையிலும், காஞ்சிமாநகர்ப் பெருமையைக் காணலாம். சீன நாட்டி லிருந்து வந்து இந்த நாட்டினைப்பற்றி எழுதிவைத்த ஹியூன் சாங் வழியாகவும் இந்தப் பெருமையை அறியலாம். கல்விப் பிரிவு என ஒன்றனைப் பழைய தமிழ்நூல்கள் கூறுகின்றன. கல்வி இளமையிலே முடிந்துவிடுகிறது என நம்புகின்றோம். இப்போது உலகம் இந்த நம்பிக்கையினை உடைத்தெறிந்துவரக் காண்கிறோம். இளமையில் கம்பனை யும் வள்ளுவனையும் முற்ற முடிய அறிய முடியாது. போதிய உலக அறிவின்றி அவர்களை உணர்ந் தின்புற முடியாது. 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது."அதனாலேயே கல்வி கற்று உலகிடை வாழ்ந்தபின் மறுபடியும் கற்க வருகின் றனர். டென்மார்க் முதலிய இடங்களில், முதியோர். கல் லூரிகள் அந்நாடுகளைக காத்துள்ளன. அப்படியே பழைய தமிழ்நாட்டிலும் கல்வி கற்று மணந்து வாழ்ந்தபின் இடையே மனைவியைவிட்டுப் பிரிந்து கல்வி கற்க முனிவரிடம் சென்று வாழும் வழக்கம் பெருவழக்காகப் பரவி இருந்தது. இது தான் கல்விப் பிரிவு. சங்க நூல்கள் இதன் பெருமையைப் பாடுகின்றன. 'சாகின்ற வரையிலும் கற்றல்" என்ற எண் ணம் தமிழ்நாட்டில் வேரூன்றியது. இதனாலன்றோ திருவள் ளுவர் "என் ஒருவன் சாந்துணையும் கலலாதவாறு?" என்று கேட்கின்றார்? தோமையர் கோயில் இருக்குமிடத்தின் தமிழ்ப் பெயர் மயிலாப்பூர் என்பதே நினைவிற்கு வருகிறது. தமிழில் இரண்டெழுத்துக்கள் தெரிந்தாலும் மயிலாப்பூர் என்ற உடன் திருவள்ளுவர் கோயிலும். அங்கு மயிர்முடியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/106&oldid=1481478" இலிருந்து மீள்விக்கப்பட்டது