பக்கம்:தமிழ் மணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 107 கொண்டு பெருந்தாடியும், திருநீறும். யோகப்பட்டமும் வீற்றிருக்கும் அவர் உருவமும் மனக்கண்ணெதிரே தோன்று கின்றன. அந்தக் கோயிலிருக்கும் இடத்தேதான் அவர் வாழ்ந்தார் என்றனர் பின்னுள்ளார். அப்படித்தான் அவர் திருக்கோலம் இருந்தது என மனக்கண்ணால் கண்டு செதுக்கிவிட்டார் ஒரு சிற்பியார். இவற்றிற்கெல்லாம் சான்று என்ன என்று அறிவு கேட்கிறது. அந்த அறியாமை இருள் நீங்க இன்னும் பொழுது விடியவில்லை. திருமயிலாப் பூரில்தான் திருவள்ளுவர் வாழ்ந்து திருக்குறளை இயற்றினார் எனப் பலரும் நம்பிவந்திருக்கின்றனர். இந்த நாலு பேர் போன வழியில் நாமும் சென்று நம்புவதில் கேடொன்றும் இல்லை. பின்னர்த்தான் திருவள்ளுவர் மதுரைக்குப் போய்த் திருக்குறளினை அரங்கேற்றினாராம். திருக்குறளைத் தந்த திருமயிலை சிறந்ததோர் அறிவுநிலையமன்றோ? வள்ளுவர் வாயிலன்றோ கலைமகள் வீற்றிருந்தாள்? அவர் இருந்த இடமே பல்கலைக் கழகம்! என்ன என்ன கலை? அறிவுக்கலை. பொருட்கலை. இன்பக்கலை, கடவுட்கலை. அரசியல் கலை. பிள்ளைக்கலை - தனித்தனி சொல்லுவானேன்! உலகமாய் பிரிந்த தமிழ்க்கலை யனைத்தும் அங்கு விளங்கவில்லையா? எல்லாச் சாதியினரும் எல்லா மதத்தினரும் எல்லா நாட்டின ரும் இதுவே உண்மை" என்று திருக்குறளைப் போற்று கின்றனர். அறிவோரிடம் சென்று கற்கும் பல்கலைக் கழகங்கள் இராமாயண காலத்திலிருந்தன என்பது பழங்கதை அன்று; அருவர் நாட்டுப் பெருவழக்கே என்பது இவ்வளவும் கூறிய தால் விளங்கி இருக்கும். முடிவாக மற்றோர் எடுத்துக் காட்டினையும் விளக்குவது நல்லது. திண்டிவனம் என்ற பெயரே காடு என்பதனை நினைப்பூட்டுகின்றது. சங்க காலத் தில் இதற்குக் கிடங்கில்' என்று பெயர். இந்தக் காட்டில் பழங்கால மரபினையொட்டி ஒரு பெரியார் சங்க காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/107&oldid=1481479" இலிருந்து மீள்விக்கப்பட்டது