பக்கம்:தமிழ் மணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 தமிழ் மணம் வாழ்ந்து வந்தார்; உண்டியும் உடையும் உறையுளும் உதவி அறிவூட்டி வளர்த்துவந்தார். *"Residential University என்று புகழ்வது இன்றைய பெருமை அன்று. அப்படித் தாமே அறிவூட்டி வளர்ப்பார்க்குக் 'குலபதி' என்று பெயர். கிடங்கிற் குலபதி, சங்கப் புலவரில் ஒருவர். அவர் பாட்டை இன்று நாம் பாடலாம்: பாடி இன்புறலாம். என்று வள்ளுவரும் அருகரும் தோமையரும் தொடாபு கொண்ட மயிலையும், அருவர் நாட்டின் வடபகுதியில் கலங் கரை விளக்கும் அறிவு விளக்கமாக ஒளிர்ந்தன கூறத் தட்டில்லை. வள்ளுவர் குறளை ஈன்றெடுக்கும் பொது மைப் பல்கலைக் கழகமாக விளங்குவதற்கு இதற்கு வாய்ப்பு உண்டு. வடநாட்டின் எல்லைப்புறமாம் அருவா வட தலையில் அமைந்து நாகரிகக் கலப்பிடமாக வீற்றிருக்கும் வாய்ப்பு ஒன்று; மேனாடும் கீழ்நாடும் வந்து போகும் உலகப் பெருவாயாம் துறைமுகமாக இருப்பதால் பிற நாடுகளை அறிய நிற்பது மற்றொரு வாய்ப்பு. சென்னை நகரத்தின் அறிவாராய்ச்சி முடிபே வள்ளுவர் போன்ற அந்நாளைய மக்கள் வாழ்ந்து காட்டிய பொதுமை அறமாகும். 5. அன்புநெறி வான மாலையில் கதிரவன் மேற்கே மஞ்சளாய்ப் பைம்பொன் னாய் உருண்டையாய் உருண்டு. செக்கச் சிவந்து, முழுதும் செவ்வொளியில் மூழ்கிக் களிக்க, மெல்ல மெல்ல மறைகின்றான். உயிர்களுக்கெல்லாம் ஓய்வு பிறக்கின்றது. இவைகளைக் கண்டு இன்பச் சிரிப்புப் பூப்பதுபோல வான் மீன்கள் ஒவ்வொன்றாக அங்கும் இங்கும் தலைகாட்டி வானக முழுவதும் நெருங்கி நிற்கின்றன:"ஓம், ஓம், ஓம்" என்ற ஒலி, விட்டுவிட்டுத் தொடர்ந்து இன்ப ஓசை ஒலியாகப் பாடுகின்றது. இஃது ஒரு மணி ஒலிதான். ஒலி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/108&oldid=1481480" இலிருந்து மீள்விக்கப்பட்டது