பக்கம்:தமிழ் மணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 109 வழியே திரும்பிப் பார்த்தால், பெரியதொரு கோபுரம் வானகத்திற்கு ஏறுவதற்கமைந்த படிக்கட்டுப் போல ஓங்கித் தோன்றுகிறது, அந்த எழுநிலை மாடத்தை நோக்கிப் போகின்றோம். கோட்டை போன்றதொரு கோயிலின் வாயி லாக அக்கோபுரம் விளங்குகிறது. மக்களைக் காணோம். துரிஞ்சிலும், வெளவாலும் கோபுரத்தில் குடிபுகுந்து கழுவி லிட்டாற்போலத் தொங்குகின்றன. ஒரே இருள்! புறத்தே இருந்த அழகிய இயற்கையையும், இருள்கின்ற இந்தக் காட்சியைப் பொறுக்கமாட்டாமல், வான்மீன்கள். கண்ணை மூடித் திறப்பதுபோல் மின்னுகின்றன. முன்னொரு காலத்தில் மக்கள் வாழ்ந்த இடமே இன்று பாழாகிக் கிடக்கின்றது எனத் தெரிகிறது. கோபுரத்தின் மேல் ஏறினால், எழுநிலை மாடத்தில் ஒவ்வோர் அடுக்கிலும் தூண்களே இல்லாத பெரிய மண்டபத்தில் நான்கு புறத்தி லும் காற்றுக் கலந்து வீசுகின்ற அழகினையும் இனிமையினை யும் என்னென்பது! உலகத் துன்பங்களை எல்லாம் மறந்து வானுலகத்தில் புகுந்தது போன்ற மகிழ்ச்சி மனததில் பொங்கி வழிகின்றது. இத்தகைய கோபுரத்தில் இருந்து தான் இராமாநுஜர், எனக்கு நரகம் வந்தாலும் இந்த உலக மக்கள் எல்லாம் என்றும் இன்ப வாழ்வு வாழ முயல் வேன் என்று கூறித் துள்ளி எழுந்த அவர் துணிவு. நினை விற்கு வருகிறது. அந்தத் துணிவின் வழியே, நாடுகளில் எல்லாம் சென்று தொண்டின் பெருமையே கடவுள் வழி பாட்டின் உண்மை வடிவம் எனப் பேசித் தீண்டாதாரைக் கோயில்களுக்குள் புகவிட்டுத் தமிழ்ப்பாட்டே எங்கும் பாடி அவர் ஆட முயன்ற முயற்சிகள் கண் எதிரே தோன்று கின்றன. எல்லாம் பழங்கதையாகி மறைந்தனவே என மனம் வாடி வதங்குகின்றது. இத்தகைய கோபுரத்திலிருந்து அருணகிரியார் கிளிபோலக் கவலையற்றுத் திருப்புகழ் பாடி யதும் நினைவிற்கு வருகிறது. ஆம்! ஒருகாலத்தில் இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/109&oldid=1481481" இலிருந்து மீள்விக்கப்பட்டது