________________
110 தமிழ் மணம் கோபுர மாடங்களில், கற்றவர் வாழ்ந்து கலைகளைப் பயிற்றி வந்தனர். இன்றும், இவற்றில் ஒவ்வொன்றும் ஒரு கல்லூரி யாகலாம். மின்சாரத் தூக்கி (Lift) ஒன்று அமைத்தால் மேலே ஏறுவதும் இறங்குவதும் எளியவாகும் எனக் கனவு காணும்போது. அங்குப் புதிய திட்டப்படி மின்சார விளக் குக்கள் மின்னிப் பொலிவதனையும் மனக்கண்ணால் காண் கின்றோம். கோபுரத்திலிருந்து கீழிறங்கிக் கோயிலுக்குள் சென் றால், பெரிய பெரிய மண்டபங்கள்: "நாலுகால் மண்டபம், பதினாறுகால் மண்டபம், நூறுகால் மண்டபம். ஆயிரம்கால் மணடபம் என எத்தனை எத்தனை தோன்றுகின்றன!" "ஏன் இவற்றினை வீணாகக் கட்டினார்கள்? கட்டினவர்கள் வெறியர் களா? என்று உள்ளிருந்து உரத்த குரலில் கேள்வி எழு கின்றது. "இத்தகைய மண்டபத்தில்தான் சேக்கிழார் பெரியபுராணம் அரங்கேற்றினார்; கம்பர் இராமாயணத் தினை அரங்கேற்றினார்; ஆசிரியன்மார் பல பல விளக்கங் களைக் கூறி வந்தனர்" என என்னுடைய நினைவு விடை கூறுகின்றது. முதியோர் கல்வி. இளையோர் கல்வி, பெண் கள் கல்வி எல்லாம் இந்த மண்டபங்களில் நடந்தேறி வந்தன. எழுத்தறியும் மண்டபம் என ஒன்று திருவொற்றி யூரில் இருக்கின்றது. அந்த மண்டபத்தில் வீற்றிருப்பவரே இராமலிங்க அடிகள் பாடும் எழுத்தறியும் பெருமாள். இங்கு இலக்கண வகுப்புக்கள் நிகழ்ந்தன. பலவகைத் துறைகளில் மக்கள் இங்குப் புகுந்து கற்றார்கள். கடவுளே இல்லை என்கிற பூருவ மீமாஞ்சை நூல்களையும், கடவுள் எதிரேயே கற்று ஆராய்ந்தார்கள். பரந்த நோக்கம் அந்த நாளில் இருந்த நிலைமை அஃது: இசைப் பாடல்கள் பாடினார்கள். 'சர்வ சங்கீத வாத்ய மண்டபம்' என எல்லா இன்னிசைக் கருவிகளும் முழங்கும்