பக்கம்:தமிழ் மணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 111 மண்டபம் ஆவுடையார் கோயிலில் இன்றும் இருந்துவருவது நினைவிற்கு வருகிறது. அரையர்கள் இசைப்பாட்டினைப் பொருள் விளங்குமாறு அபிநயம் பிடித்துக் கூத்தாடிக் காட்டுவதற்கு இராமாநுசர் முதலானோர் பெரிதும் முயன்ற பெருங் கதையும் மனத்திற்கு வருகிறது. கோயிலே உண்மை யிற் பல்கலைக் கழகமாக அந்த நாளில் விளங்கியது. அது மட்டுமா? ஊர்மக்கள் இந்த மண்டபங்களிலேயே ஊரினை ஆளும் ஊராளும் கணத்தாரைத் தேர்ந்தெடுத்தார் கள்: குடத்தில், ஊரார் பெயர்களை எல்லாம் தனித்தனியே ஒவ்வொரு பனையோலை நறுக்கில் எழுதியிட்டுச் சிறுவனொரு வனை அனைவர் எதிரிலும் குடத்தில் கையிட்டு ஒரு நறுக்கை எடுத்துத் தரச் சொல்லுவார்கள். அந்த நறுக்கில் உள்ள பெயர் உடையவரே ஊராளும் கணத்தவராவார். 'எல்லோ ரும் ஓர் நிறை என்பதனை ஒட்டிய தேர்தல்முறை அது. பஞ் சாயததார் என்ற வாரியத்தார் கூடி ஊராளும் வேலைகளைப் பார்ப்பதும் அந்த மண்டபங்களிலேயே ஆம். பல பல சாதி யினரும் பல பல தொழிலினரும் தங்கள் தங்கள் குழுவினைப் பற்றியவற்றினை ஆராய்வதும் அங்குக் கூடித்தான். ஊரா ளும் கணத்தாரின் பணமிருப்பதும் அங்குத்தான். அரசர்கள் கட்டளையைக் கல்லில் அடித்துவைப்பதும் அங்குத்தான். 'ஏழை பங்காளன்' எனக் கடவுளுக்கு ஒரு பெயர் வந் தது. இத்தகைய கோவில்களால்தாம். நோயாளர்களுக்கு மருந்து கொடுக்கவும், படுகிடையாகக் கிடப்பார்க்கு உணவு முதலியன உதவவும் ஏற்பாடுகள் உண்டு. இவர்களை அன் போடு காப்பாற்ற,இன்று,'நர்சுகள்' என்று சொல்லுவது போன்ற பணிப்பெண்களும் இருந்தனர். வேலை செய்ய முடியாமல் குருடும் முடமுமாய் இருப்பவர்க்கு அந்த நாளில் செய்திருந்த ஏழ்மை ஒழிப்புத் திட்டம் மிக அழகியது. கையில்லா முடவன் தேவாரம் முதலிய பாடல்களைப் பாடக் கண்னில்லாக் குருடன் மத்தளங் கொட்டிக் கோயிலோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/111&oldid=1481485" இலிருந்து மீள்விக்கப்பட்டது