பக்கம்:தமிழ் மணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 118 எனலாம். சைனர்களும் புத்தர்களும் தங்கள் தங்கள் அறப் பள்ளிகளில் சமுதாயத் தொண்டு செய்துவந்தார்கள். இவற் றினை எல்லாம் அறிந்த தொண்டைநாட்டுப் பெருமக்கள். இங்கு ஒரு புரட்சி செய்தனர். அதுதான் மேலே கூறிய பெரிய கோயில்கள். " உலகினை மறந்து கடவுளை வழிபடுவது கடவுள் வழிபா டாகாது. அச்சத்தால் நடுங்கிச் செய்கின்ற பேய் வழிபாடு கடவுள் வழிபாடாகாது. இன்பப் பெருமானை அன்பினால் அகங குழைந் துருகி வாழ்த்தி வணங்கவேண்டும். அவ னுடைய அன்பின் விளக்கமன்றோ உலகமனைத்தும்! நாம் வாழ்வதும் அவனுடைய அருளால் அன்றோ! கடவுளுக்குப் பலபல இயல்புகள் கூறினாலும் எல்லாரும் தம் அனுபவத் தில் உணர்ந்ததாய் இருப்பது எது? அன்பு அன்றோ! அதுவே கடவுள். "அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறி விலார்; அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்; அன்பே சிவ மாவது ஆரும் அறிந்தபின், அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே.' கடவுள். உலகமாய்ப் பூத்துள்ளான். மண்ணிலும் அவன் கடவுட்டன்மை விளங்குவதால் அன்றோ, வளங் கொழித்து நெல்லையும் பழத்தையும் அது வளர்த்துத் தரு கின்றது! அதனைப் பாழாக்காது பண்படுத்திக் காப்பதும் வழிபாடாம். நீரோ, நம் உடலுக்கு உற்ற துணை; அதனைப் பலவகையிலும் பாய்ச்சி உலகினை வளர்ப்பதோடு. அதனைக் கெடுக்காமலும் இருப்பதும் கடவுல் வழிபாடாம். காற்றும், தூயதாகக் கடவுட்டன்மை நிரம்பி வழியுமாறு வாழ்வதே கடவுளுக்கு உவப்பான வாழ்க்கை. தீயும். அவன் திறலை விளக்குகிறது. வானும். அவன் புகழ்போலப் பரந்து அனைத் திற்கும் இடம் கொடுக்கிறது. சூரியன் இல்லையானால் உல கில் சூடேது? பயிர் எது? வாழ்வேது? இத்தனையும் தந்து உலகத்தை அளந்து செல்லும் சூரியனையும் திங்களையும் இயற்கை அழகெல்லாம் ஒருங்கு திரண்ட இரண்டு கடவுட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/113&oldid=1481487" இலிருந்து மீள்விக்கப்பட்டது