பக்கம்:தமிழ் மணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 தமிழ் மணம் குடங்களாகக் கண்டு களித்து, அவற்றின் ஒளியில் குளித்து மகிழ்ந்து, காலத்தினை வீணாக்காது அவற்றினாலாய பயனை எல்லாம் உலகம் உறிஞ்சிக் குடிக்குமாறு செய்யவேண்டும். இந்த இயற்கைப் பரப்புனைத்தும் உயிர்ப் பொருள்கள் ஓடி யாடும் கூத்து மேடையேயாம். இந்த உயிர்களுள் ஒவ்வொன்றி லும் கடவுள் வீற்றிருக்கின்ற காட்சிக்கு உருகி, இவைகளுக குத் தொண்டு செய்வதே உண்மையான கடவுள் வழிபாடு. அன்பும் சிவமும் ஒன்றெனக் கூறுவது. இந்த வகையால் மட்டுமே உண்மையாம். . இவ்வளவும் கூறியது. இருநிலனாய்" என்று திரு நாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகத்தின் கருத்தே யாகும். இஃது அவர் செய்த புரட்சி. அவர், தம் பாடலில் கைத் தாண்டினை வற்புறுத்தக் காண்கிறோம். உழவாரப் படையே அவர் கையில் விளங்கியதாகத் தலைமுறை தலைமுறையாகத் தமிழர் நம்பி வந்தனர். காடு திருத்தி நாடாக்கிக் குளங்கள் தொட்டுப் பூந்தோப்புக்கள் வைத்து இருள் எல்லாம் போக விளக்குக்கள் ஏற்றி இன்னிசை பாடி இன்பமூட்டுவதே அவ ருடைய தொண்டு. அவருடைய அடியாரான அப்பூதி அடி கள் அவரைப் பின்பற்றித் தண்ணீர்ப் பந்தல் முதலிய அமைத்து மக்கள் தொண்டே செய்துவந்தனர் என்ற வர லாறும் இந்தக் கருத்தினையே வற்புறுத்துகிறது. அரசியு லாரையும் எதிர்நோக்காது. மக்களை ஒருங்கு திரட்டி, இத் தகைய பொதுத் தொண்டில் ஈடுபடுத்தியதும் கண்டு. ' போட்டி அரசு" நிலைநாட்ட வந்தார் எனப் பல்லவ அரசர் கருதி. அவருக்கு இடையூறு செய்ய வந்தனர் போலும்! எனவே, அவர் காலத்திலேயே அவருடைய தொண்டு ஒரு பெரிய புரட்சி எனக் கருதப்பெற்றதோ என ஐயப்பட இடமுண்டு. ஆனால், அன்பு வெல்லும். எத்தனை நாள் அதனை ஐயுற்றுக் கிடக்கலாம்? அரசரும் அப்பருடைய அடியவர் ஆனார். ஆனதன் பயன் யாது? புதுமை ஒன்றனை . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/114&oldid=1481488" இலிருந்து மீள்விக்கப்பட்டது