பக்கம்:தமிழ் மணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னை நாகரிகம் 115 நிலைநாட்டியதாகத் தம்மைத் தாமே அந்த மகேந்திர வர்ம பல்லவர் பாராட்டிக்கொள்கின் றார்; புதிய வகையில் கோயில்கள் எடுப்பித்தார். கற்கோயில்கள் - சமுதாயத் தொண்டின் உயர்நிலையாக அமையக்கூடிய கோயில்கள்- எங்கும் பரவின. கல்வெட்டுக்கள் கொண்டு திருநாவுக்கரச ரது தொண்டு நெறி, தென்னாட்டுக் கோயில்களை மாற்றி யமைத்ததனை அறியலாம். இதுதான் அன்புநெறி. இதனையே வடமொழியில் பக்தி நெறி என்பர். பக்தி எனபது பின்னாளில் பலபல கோலம் கொண்டு வெறிக்கூத்தும் ஆடியது. ஆனால், அதன் தோற்று வாய், சமுதாயத் தொண்டேயாம். பக்தி என்கிற நங்கை தமிழ்நாட்டிலிருந்து வடநாடு புகுந்தாள் எனப் புராணங் கூறு கின்றது. இதிலிருந்து இந்த அன்புநெறி தமிழர் கண்ட உண்மை என்பது விளங்குகிறது. சங்க நூல்களில வரும் காதலன்பே உலக மக்களிடையே எல்லாம் பாயும் கடவுள் அன்பாக மாறுவது இயல்பன்றோ? ஆகவே, அன்புநெறி தமிழர்நெறியே ஆம்; தொண்டைநாட்டு நெறியாம்; சென்னை நாகரிகத்தின் பண்பாடும் ஈதேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/115&oldid=1481489" இலிருந்து மீள்விக்கப்பட்டது