பக்கம்:தமிழ் மணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கறியும் சோறும் 13 தில்லை. தமிழொன்றையே தமிழ்மக்களனைவரும் கற்றுத் தெளிதல்வேண்டும். மேல்வகுப்பில் கற்க விரும்புவார் சிறிது துலுக்கு மொழியிற் பேசவும் ஆங்கிலம் கற்கவும் தொடங்கலாம். உயர் வகுப்பில் ஓத வருவார் பழைய மொழி களையோ பிற நாட்டு மொழிகளையோ விருப்பமிருந்தால் ஓத இடம் அளித்தல்வேண்டும். கட்டாய இந்தியால் பிற மொழிகள்மேல் மனக்கசப்பு எழுந்தது. கட்டாயத்தால் எந்தக் கலையும் வளராது என்பதனை உணர்ந்தபின் இந்தக் கசப்பு நீங்கவேண்டாமா? தமிழன் தனியே வாழ முடியாது. பிற மொழிகளைத் தமிழன்போலக் கற்பாரும் இல்லை என்ற உண்மையை உறுதியாக நம்பிப் பிற மொழிகளைக் கற்பதில் நம்மவர் ஊக்கங் கொள்ளுதல்வேண்டும். வடமொழியை நம் மவர்போல ஓதுவார் உண்டா? ஆங்கிலத்தினைச் சீனிவாச சாத்திரியார்போல உலகிற் பேசியவர் உண்டா? வான மளந்த தமிழையறிந்த தமிழனுக்கு. 'ஆகாதது' என்று ஒன் றும் இல்லை. இந்த உறுதி வளரவேண்டும். பிறமொழி கண்டு தடுமாறும் மனம் ஒழியவேண்டும். உலகெல்லாம் தமிழ் வளர இதுவே வழி. "தமிழன்றி வேறொரு மொழியும் வேண்டாம்" என்ற கருத்துப்போலத் தமிழினைக் கொலை செய்யும் படை வேறொன்றும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/13&oldid=1480327" இலிருந்து மீள்விக்கப்பட்டது