பக்கம்:தமிழ் மணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. ஆமையும் முயலும் தமிழுணர்ச்சி - தமிழ் மலர்ச்சி - தமிழ் மணம் -தமிழ் ஒளி - தமிழ் முரசு - தமிழ்க் கலை - தமிழ் விருந்து - தமிழ் வெள்ளம் - இன்றைய தமிழ்நாடு தரும் காட்சி இது.இதோ 'தமிழ்த் தென்றலும்" வீசுகிறது. காய்ந்த உடல் கனிந்து மகிழ அதில் ஒரு குளிர்ச்சி உண்டு. தமிழ் மலரின் மண மெல்லாம் கொண்டு அது வீசுகிறது: தமிழ்த் தேன் நாவில் அமுதத் துளியாய் ஓயாது இனிக்க வீசுகிறது. தமிழ்க் குயி லின் பாட்டும் காதில் விழுகிறது. இந்தக் காற்று வீச்சில் மாசு நீங்கித் தமிழின் உயிரொளியும் பளபள என மின்னித் தோன்றுகிறது. தமிழ்த் தெனறல் வீச வீசத் தமிழறிவுத் தனித் தீயும் அறியாமை இருளை ஓட்டி அழகு விளக்காக ஓங்கி எரிகிறது. எல்லாம் தமிழ்! எங்கும் தமிழ்!' இது நல்லது: இனியது. ஆனால், 'வேறு ஒன்றும் இல்லை; இருந்தாலும் வேண்டாம்" என்பதாக இது முடிதலாகாது. வேறெங்கும் கண் எடுத்துப் பார்ப்பதில்லை என்றால் கண்மூடிக் கிடப்பது என்றே பொரு ளாம். இங்குப் பகல் அங்கு இரவு" எனத் தொலைவில் கிடக்கும் - பாதாள உலகமாய்க் கிடக்கும் - அமெரிக்காவை யும் நமது அண்டை வீடாக்கிவிட்டது ஆகாய விமானம். இவ்வாறு உலக முழுதும் ஒன்றாகும்போது தமிழ்நாடு எங்கே பறந்து ஓடிப்போகக்கூடும்? உலகக் கருத்துக்களை எல்லாம் தமிழில் கொண்டுவந்து குவிக்கவேண்டும். ஆனால், அவற் றிற்கு அடிமையாகவேண்டாம். அவற்றினை ஆராய்வதற் கேனும் அவற்றை யறியவேண்டாமா? காற்று எங்கிருந்தே னும் வீசலாம்: அது தமிழ்த் தென்றலாக முடியுமானால் ன்பமானதேயாம். அறிவு. கதிரவன்போல உலகிற்குப் பொது. ஒளி எங்கிருந்தேனும் வரலாம்: தமிழ்நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/14&oldid=1480328" இலிருந்து மீள்விக்கப்பட்டது