உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழ் மணம்

கற்கத் தொடங்கினால் இனிதாகக் கற்கின்றன. ஆடல் பாடலாகவே அறிவு வளர்கின்றது. எதனைப்பற்றியும் எளிதாக விளங்கும் நூல்கள்! எழுத்துத் தெரியாமற்போனாலும் படத்தாலேயே எல்லாவற்றையும் விளக்கும் நூல்கள்! வழவழப்பான ஏடுகள்! முத்துமுத்தான எழுத்துக்கள்! பட்டுப்போலப் பளபள எனப் பொலியும் கட்டுக்கள்! விளையாடிக்கொண்டே கற்கும் நூல்கள்! பாடிக்கொண்டே அறியும் நூல்கள்! இவற்றிலும் என்ன என்ன வகை! என்ன என்ன அழகு! என்ன என்ன இனிமை! தமிழ்க் குழவிக்கு இந்த வாய்ப்பு உண்டா? “அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவான்” என மருட்டி வெருட்டுகிறோம். குழவியன்றோ நாளைத் தமிழன்? நாம் படும்பாடு எல்லாம் அவனுக்காக வன்றோ? அவனையே இப்படி வளர்த்தால் எதிர்காலம் எப்படி இன்பமாக மலர முடியும்? மனம் மகிழ்ந்து குழவிகள் எந்த நூலை ஓதும் என அறியவேண்டாமா?. இப்போது இருக்கிற நிலையில் பிற மொழி நூல்களைக் கண்டாலன்றி இந்த உண்மை விளங்குமா?

அவ்வளவுதானா? உலகில் தோன்றிய கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றை ஆங்கிலத்தில் காணலாம். ஆங்கிலந்தான் இன்றைய உலகத்தின் கண். உலகப் பொருள்களைப்பற்றி மேலும் மேலும் அறிய விரும்பினால் ஆங்கிலத்தினை ஒதுக்கித் தள்ள முடியுமா? தமிழ் முதல்மொழியாகிவிட்டது. தமிழில் பாடநூல்கள் வரும். அவ்வளவே! ஆங்கிலத்தில் இருப்பதனைத்தும் தமிழாகிவிடுமா? பாடத்தில் உள்ளவற்றைப்பற்றி மேலும் மேலும் குறிப்புக்கள் அறிய விரும்பினால், ஆசிரியர் எங்கே போகக்கூடும்? ஆங்கில நூல்களிடந்தான் செல்லக்கூடும்?

என் இப்படித் தலைகீழாகத் தமிழ்நாடு நிற்கிறது? தமிழன் சில நூற்றாண்டுகள் தூங்கிக கிடந்தான். ஆங்கிலேயன் இவனைத் தூங்கவும் வைத்தான். இப்போதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/16&oldid=1837359" இலிருந்து மீள்விக்கப்பட்டது