பக்கம்:தமிழ் மணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆமையும் முயலும் 17 தமிழன் விழித்தெழுகின்றான்.'ஆமையும் முயலும் ஓடிய கதையாய்த் தோன்றுகிறது. ஆங்கிலேயனே முன்னேறி ஓடியுள்ளான். அவன் ஓடிய வழியில் அவன் அடிச்சுவட்டினைப் பின்பற்றித்தானே ஓடவேண்டும்? விரைவாக ஓடி வெற்றி பெறவேண்டும். ஆங்கிலத்தில் இருப்பதுபோலத் தமிழிலும் எல்லாக் கருத்துக்களும் அழகு அழகாக இனிமை இனிமை யாக எல்லோருக்கும் எளிதில் எட்டும்படி குவித்துக் குவித்து வைக்கவேண்டும். அப்போது நாம் பின்பற்றக்கூடிய ஆங்கி லேயரின் அடிச்சுவடு தோன்றாது. அவன் நம் பின்னே இருப் பான்; நாம் முன்னே இருப்போம். நம் அடிச்சுவட்டினைப் பின்பற்றியே அப்போது அவன் வரவேண்டும். அதுவரையில் ஆங்கிலத்தினையோ பிற மொழிகளையோ வெறுத்துப் பயனில்லை. தமிழ்மொழி பேராற்றல் படைத்தது. கும்பகருணன் பேராற்றல் படைத்தவன்: ஆனால். தூங்கித் தூங்கி ஒன்றற்கும் உதவாமற்போனான். நாமும் தூங்குதல் கூடாது; விழிப்பாக இருக்கவேண்டும்; விழித்தெழுந்து விரைவாக ஓடவேண்டும். தூங்கினால் ஆமை; விழித்தோடி னால் முயல். இல்லை,தூங்கினால் பிணம்; ஓடினால் பணம். பணம் எங்கும் பாயும். தமிழ் இப்போது விரைந்தோடு கிறது. அதற்கென்ன ஓட்டம? செலாவணி? தமிழ்மொழி, உண்மையில் முதல்மொழியாக அமையவேண்டும். எல்லாம் தமிழாகிவிடும்; எங்கும் தமிழாகிவிடும். அப்போது ஆங்கிலம் துணைமொழியாக உதவுவதில் கேடொன்றும் இல்லை.ஆளும் மொழி என்று அதனைக் கற்கும் நிலை போயது. கட்டாயத்தால் கசப்பு நிலை நீங்கியது. உலக மொழி எனக் கற்கும்போது அதிலோர் இனிப்புத் தோன் றும். ஆங்கிலேயர் மொழி என்பதன்று அதன் பெருமை. அதுவே புதுமையின் வடிவம். புதுமையின் வாய்க்கால் அது; அதனைத் தமிழ் நிலததில் பாய்ச்சிக்கொள்வதில் கேடொன்றும் இல்லை. பழைய எரு இங்கு நிறைய உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/17&oldid=1480331" இலிருந்து மீள்விக்கப்பட்டது