குழப்புதல் வேண்டா
23
கலைச் சொற்கள் நாள்தோறும் வளர்ந்துகொண்டே வருகின்றன. நம்முடைய கல்வி அறிவை நாம் அறிந்த கலைச் சொற்களின் எண்ணிக்கை கொண்டு அளந்துவிடலாம். நாம் அறிந்த கலைச் சொல்லே நம்முடைய கலை அறிவானால் இவற்றை முழுதும் மொழிபெயர்ப்பாகவோ, வேறாகவோ மாற்றி அமைக்கும்போது என்ன நேரும்? இன்று கலையில் வல்லவர்கள் என்பவர்கள் எல்லாம் அந்தப் புதிய சொல்லுலகில் ஓரறிவுமில்லாதவர்களாக மாறிவிடுவார்கள். தமிழ் அறிந்தவன் திடீரென ஹாடண்ட்டாட் மொழியினிடம் சிக்கினால் ஊமையாகத்தானே விளங்கவேண்டும்? ஆசிரியர்கள் எல்லாம் இப்படி ஊமையானால், இனிக் கற்பிப்பார் யார்? எனவே, அனைத்துலகக் கலைச் சொற்களைப் பயன்படுத்துவது தான் இப்போதுள்ள ஒரே வழி. ஆசிரியர்களுக்கும் அவை கொண்டு கற்பித்தல் எளிதாம். தமிழில் நூல் இல்லாத பொழுது ஆங்கில நூல்களையே நம்பி வாழும் மாணவரும், பிறரும் இக் கலைச் சொற்களை அறிவதால் ஆங்கில நூல்களைக் கற்பதும் எளிதாகிவிடும். தமிழில் எழுதுவதும் மாணவர்க்கு இயல்பாகிவிடும். தமிழில் நூல்கள் வரும் வரையிலும் காத்திருக்கவும் வேண்டாம். கலைச் சொற்களை அறிவது என்பதுதான் கல்வித்துறையில் ஆழ்ந்து வருவதன் பயன் எனக் கண்டமையால் அவற்றின் எண்ணிக்கையை, அறிவைக் குறைத்தால் அன்றிக் குறைக்க முடியாது. எனவே, அவை நீங்கலான பிற சொற்களைத் தமிழில் எழுதுவதுதான் இங்கு மாணவர் காணும் எளிமை. இந்த எளிமையைத்தான் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கல்லூரிக்குரிய நூல்களில் விஞ்ஞானம் இப்படித்தான் எந்த மொழியிலும் மணிப்பிரவாளமாக அமைய முடியும். கலைச் சொற்கள் பெருக்கல் வாய்பாட்டில் வரும் எண்கள் போன்றவையேயாம். ஆதலின், அவை உலகப் பொதுமொழி எனலாம். ஆனால், விஞ்ஞானத்தைப் பொதுமக்கள் அறியும்