பக்கம்:தமிழ் மணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 தமிழ் மணம் புரவலர்கள் இருக்கும் வரை அவர்கள் இலக்கியம் மக்களை உயர்த்தும் இலக்கியமாகத் தூய வானகத்தில் பறந்து வரலாம். இந்த நிலையில் என்ன செய்வது? குடியரசின் பெருமை கூட்டுறவின் பெருமை. பண்பாட்டில் ஈடுபடுபவர் எல்லாம் ஒன்று சேர்தல்வேண்டும். அரசியலார் இவர்கள் சங்கத் திற்கு ஒரு சிறப்பிடம் தருதல் வேண்டும். சிறந்த நூல்களுக் குப் பரிசு வழங்குதல் முதலிய தொண்டுகளில் இந்தச் சங்கம் ஈடுபடுதல் கூடும். "நாட்டிற்கு இன்றியமையாது வேண்டப்படுவன யாவை? பிற நாடுகளில் எவ்வாறு இவை எல்லாம் வளருகின்றன?" என்பன போன்றவற்றை ஆராய்ந்து வெளியிடலாம். அவற்றை நிறைவேற்றத் திட்டங் கள் வகுத்து அரசியலார் உதவியைப் பெறலாம். வழிகாட்டி யாக இந்தச் சங்கம் விளங்குமே அனறிப் புலவர்களை ஒரு வழியில்தான் செல்லவேண்டும் என வற்புறுத்தி எந்திர நாகரிகத்தில கொண்டுவிடாது. பழைய நாளில் தமிழ்ச் சங்கம் அத்தகைய தொண்டினைச் செய்துவந்தது. இது நாமறிந்த பழங்கதை. இன்று தமிழ் வளர்ச்சிக் கழகம் ஒரு சிறிய அளவில் அத்தகைய முயற்சி யில் ஈடுபட்டிருக்கின்றது. அரசியலாரின் ஒத்துழைப்பிருந் தால் மேலும் பல நன்மைகள் செய்தல் கூடும். ஆனால், தமிழுக்கு மட்டும் இவ்வாறு இருந்தால் இந்திய நாட்டுக்குப் போதுமா? ஒவ்வொரு மொழிக்கும் இவ்வாறு இருந்தால்கூடப் போதாது; நாடு முழுவதற்கும் உழைக்கும் ஓர் இலக்கியச் சங்கம், பழைய தமிழ்ச் சங்கம் இருந்த நன்மதிப்போடும். ஆற்றலோடும், பெருமையோடும் இன்று விளங்கவேண்டும். உரிமை பெறுவதற்கு முன்னர்ப் பலர் இத்தகைய முயற்சிகள் எடுத்ததுண்டு. அறிஞர் கசின்சு (டாக்டர் கஸின்ஸ்) இத் துறையில் பெரிதும் முயன்றார். இஃது ஒரு பழங்கனவு. ஆனால், இத்தகைய சங்கம். அந்நாளைய மன்னர்பிரான் பொறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/32&oldid=1480435" இலிருந்து மீள்விக்கப்பட்டது