பக்கம்:தமிழ் மணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்கம் எங்கே? 31 பழுக்கும் இனிய இன்ப அன்புப் பழமன்றே பண்பாடு? இந்தப் பண்பாடு வளர்வதன்றோ உரிமையின் அறிகுறி? அதுவே மணக்கோலம்; பிற எல்லாம் பிணக்கோலம். இந்தப் பண்பாட்டின் வளர்ச்சியை இலக்கிய வளர்ச்சியில் காண லாம். எல்லாத் துறைகளும் அங்கு நிழலிட்டு ஒளிர்ந்து விளையாடும். இந்த வகையில் இன்று என்ன காண்கிறோம் பாரதிக்குப் பின்? பழைய நாளில் சேர சோழ பாண்டிய பல்லவர் தமிழை வளர்த்தனர். வள்ளல்கள் புலவர்களுக்கு வறுமை என்பதே தெரியாதபடி வாரி வழங்கினர். விசயநகரப் பேரரசும் புலவ ரைப் போற்றியது. பின்வந்த பாளையப்பட்டினரும், சிற் றரசினரும் தம் பேரவையில் புலவரை வைத்துப் பாராட்டு வதனை இன்றியமையாத அரசியல் வழக்கமாகக் கொண்டு வந்தனர். புலவரில்லாத செல்வரது அவை பொலிவு பெறுவ தில்லை என்று எல்லோரும் நம்பினர். ஆனால், இன்றோ. முடிவேந்தரும் இல்லை சிற்றரசரும் மறைந்தனர்; நிலத்திற் பொலிந்த செல்வர் நடுப்பகலில் நிழல்போல மறைந்து வரு கின்றனர். குடியரசில் எல்லோரும் இந்நாட்டு மன்னர். ஆனால், இந்த மன்னர்களோ, பட்டினி வள்ளல்கள்! இவர்கள் எப்படிப் பாவாணரைக் காப்பது? பட்டினியைத்தான் பங்கிட் டுக் கொடுக்கலாம்! புரவலர்கள் ஏன் வேண்டும்? உயர்ந்த இலக்கியங்களை இயற்றவேண்டுமானால், பெரும்பான்மையோர் அதனை உடனே சுவைத்து இன்புற முடியாது. பாடிய பாவலனாருக்கு அவர் எல்லாரும் சோறிட முடியாது. இன்று, அசையும் படங் களிலும், பேசும் படங்களிலும் என்ன காண்கிறோம்? களவு- கடையான காமம் - இவற்றை விளக்குகின்ற கதைகளே பணத்தைக் குவிக்கின்றன. இலக்கிய உலகிற் சிறந்த படங் கள் அங்கு விலையேறுவது அருமை. பழைய புலவர்களுக்கு இன்றைய பட முதலாளிகளின் கவலை இருந்தது இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/31&oldid=1480434" இலிருந்து மீள்விக்கப்பட்டது