பக்கம்:தமிழ் மணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6. சங்கம் எங்கே? நமது நாடு உரிமை பெற்ற நாடாகி ஐந்து ஆண்டுகள் முடியப்போகின்றன. ஐந்தாம் ஆண்டில் நமது நாட்டில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகின்ற வழக்கம் உண்டு. பள்ளிக் குப் போகின்ற பருவம் வந்தும், கண்ணைத் திறந்துபாராத குழவியாகவே நமது நாடு இன்று விளங்குகிறது. எழுதப் படிக்கத் தெரியாதவர் எத்தனை பேர்! இன்று சித்தூரில் பஞ்சம்: நாளை இராமநாதபுரத்தில் பஞ்சம்: நேற்றுக் கோயம் புத்தூரில் பஞ்சம் என்று, பஞ்சப் புராணம் பாடுவதே பெருவழக்காகிவிட்டது. 'இல்லை; பாடவும் ஆள் இல்லை. பாட்டு வளர இடம் உண்டா? மக்கள் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். ஆனால், அவர் கள் பெருமை அவர்கள் இறந்த பின்னும் வாழ்கின்றது. அவர்கள் வளர்த்த பண்பாடு சமுதாயத்திற் படிந்து. தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ஆற்று வெள்ளம் போல ஓடுகின்றது. தாய் மடியில் தவழ்ந்து தாய்ப்பாலோடு இந்தப் பண்பாடு விளங்கும் தாய்மொழியையும் உண்டு வளர்கின்றோம். பண்பாட்டின் பிற வடிவங்கள் - ஓவியங்கள், கோபுரங்கள் - மறைந்தாலும், மொழியாகவும், மொழிவழி வளரும் செயலாகவும் ஓங்கி ஒவ்வொருவரிடமும் சிறப்புற்று வரும் பண்பாடு மறையாது. இந்த மொழிப் பண்பாட்டின் பெருமை, அந்த மக்களினத்தின் உயிர்நிலை, அவர்கள் வர லாற்றின் சுருக்கம், அவர்கள் நெஞ்சின் துடிதுடிப்பு - இலக் கியங்களில் விளங்குகிறது. மக்களின் உயிர்நிலையாக விளங்குவது பண்பாடு. நம் உரிமை இந்தப் பண்பாட்டினை வளர்க்கவில்லையானால் என்ன பயன்? சாவதற்கா உரிமை? வாழவன்றோ உரிமை? வாழ்வென்றால், பாட்டு. பல துறை யாக விரிந்து வளரும் உண்மை நாகரிகத்தில் அறிவாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/30&oldid=1480345" இலிருந்து மீள்விக்கப்பட்டது