பக்கம்:தமிழ் மணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடற் கிழவன் 29 அரபிக்கதையில், சிந்துபாது என்ற மீகாமன், பல இடையூறு களுக்கு உள்ளாகி, முடிவில், செல்வனாகத் திரும்புகின்றான். ஒருமுறை கடற் கிழவன் ஒருவனைக் காண்கின்றான் சிந்து பாது. நடக்கத் திறமற்ற கிழவன். வழி அறியாத சிந்து பாதுக்கு வழிகாட்டவேண்டித் தோள்மேல் ஏறிக்கொள் கிறான்; பின்னர்க் கழுத்தை நெரிக்க முயல்கின்றான். உடையவரைக் கும்பிட்ட பயன் போலும் அந்தக் கதை யின் உட்பொருள். இன்று, படுத்த படுக்கையிலேயே தெளிவாகிவிடுகிறது! பழமையின் கொடுமையே கிழவனது கொலைமுயற்சி. நல்லகாலம்! கிழவன் கையிலிருந்து சிந்து பாது தப்புகின்றான். பழமையின் பிடியிலிருந்து மக்களும் விடுபடுவர் என்பதன்றோ இதன் கருத்து! வலவனேவா வான ஊர்தியில் சென்று, அணுக்குண்டு எறியும் இந்த நாளில். பழமையின் கொடுமை ஏது என்று சொல்லப்போமா? கம்பர் எழுதிய பின்னுமா பாட்டு எழுதுவது? பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதிய பின்னுமா வேறொரு விளக் கம் எழுத முற்படுவது? நச்சினார்க்கினியருக்குப் பின் ஒரு தொல்காப்பிய ஆராய்ச்சியா? சிவஞான முனிவர்க்குப் பின் னர்ச் சித்தாந்தத்தைப்பற்றிப் பேச என்ன உண்டு?' - இவ்வாறு பேசுகின்ற பேச்சு எல்லாம் கடற் கிழவனுடைய புதிய கோலங்களே ஆம். பெரும்பூதூர்க் காட்சி எல்லாம் இந்தக கிழவனது காட்சியே ஆம். தொல்காப்பியத்தினையும் கம்பனையும் காட்டி நம்மை வாய்ப்பூட்டிட்டுச் சிறைப்படுத்த முயல்வார் எல்லாம் கட டற் கிழவர்களே ஆவர். சிந்து பாது பிழைத்துச் சிறந்து ஓங்குவானாக?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/29&oldid=1480344" இலிருந்து மீள்விக்கப்பட்டது