பக்கம்:தமிழ் மணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 தமிழ் மணம் கனவிலும் கிடையாது. "உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்" என்று எத்தனை முறை நெஞ்சுத் தண்ணீர் எல் லாம் வற்ற வறட்டுத் தவளைபோலக் கத்தினாலும், செவிடன் காதில் சங்கு ஊதியதுபோலக் கிடக்கின் றீர்களே! நன்னூ லைச் சூளையில் வைத்துச் சுட்டெரித்தாற்போல. இலக்கணத் திற்கு மாறாகச் சொற்களைப் பிரித்து எழுதுகின்றீர்களே! "மறைந்தவ ருட்சென் றுண்டார்" என்றன்றோ சொற்களைப் புணர்த்து எழுதவேண்டும்? என இரைகின்றார் கிழவர். சிறுவனுக்கோ, ஒன்றும் விளங்கவில்லை. நகைச்சுவைப்பட எழுத்வந்த சிறுவன் நடுநடுங்கி. என்றென்றும். எழுதுவ தனையே விட்டுவிடுகின்றான். . இருண்டுவிடுகின்றது. வீடு திரும்புகின்றேன். 'தூங்க லாம்' எனப் படுக்கையில் சாய்ந்து, கண்ணை மூடிக்கொள் கின்றேன். கண்டன எல்லாம் காற்றாய்ப் போயின என நினைக்கின்றேன். ஒரு காட்சி தோன்றுகிறது. கனவா? நனவா? தெரியவில்லை. என்ன காண்கின்றேன்?.... தோள்வலி படைத்த காளை, வாடி வதங்கிக் களைத்து இளைத்துநிற்கின் றான். அவன் தோள்மேல், எலும்பாய் ஒட்டிய வடிவம். காலம் கண்ட நரைத்தலையோடும் காட்சி அளிக்கின்றது. அருகே, இந்தக் காளை நீந்திவந்த கருங்கடல், 'ஓ' என்று இரைந்து. பெருஞ்சிரிப்புச் சிரித்து. அலைகளை வீசிக் கைதட்டிக் கொக்கரித்து நிற்கின்றது. காளை திணறுகின் றான்; நடக்கமாட்டாது தள்ளாடுகின்றான். கள்ளக் கிழவன் காளையின் கழுத்தைக் காலால் நெருக்கி, மெல்ல முறிக்க முயல்கின்றான்!... மறக்க முயன்றாலும் இது மறையாது என்னை வெருட்டு கின்றது. இதனைக் காணுந்தோறும் என் கழுத்துத்தான் முறிவதுபோலத் திடுக்கிட்டு எழுகின்றேன். பேயா என்னை மிதிக்கின்றது? இல்லை. பழைய நினைவு வருகின்றது. நான் ஏழாம் வகுப்பில் கற்ற கதையில் வரும் காட்சி இஃது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/28&oldid=1480343" இலிருந்து மீள்விக்கப்பட்டது