பக்கம்:தமிழ் மணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5. கடற் கிழவன் இதோ, கதிரவன் எழுகின்றான். இன்று உடையவர் (இராமாநுசர்) திருநாள். திருமண் பூசிய அடியார் பலர் சூழநின்று அகமகிழ்கின்றனர். இவர்களிடையே, "சிதம்பர தரிசனமா, பறையா! நீ அதைச் சிந்திக்கலாமா, போடா!" என்ற பாட்டின் பொருளை நெடுகப் பேசுகின்றார் ஒரு பெரியார்: "தீண்டாமை ஒழியக் கோயில்களை ஒழிப்பதா? என்று கோயில்மேலும் சீறி விழுகின்றார்! தீண்டாமை நீங்கப் பிறப்பெடுத்த உடையவர் பிறந்த பெரும்பூதூரில் காலத் தின் கோலத்தால் இத்தகைய பேச்சுப் பெரும்பேச்சாய் எழுவது கண்டு கோயில் துறையாளரும் திடுக்கிடுகின்றனர். பேச்சு முடிகிறது. வயிற்றுக்கு நல்ல விருந்து! உண்ட களைப்பில் உறங்கி விடுகின்றேன். ஆசிரியருடைய கூப்பாடு கேட்டு விழித்துக் கொள்கின்றேன். மாலை ஆகின்றது. அருகே ஒரு பள்ளியி லிருந்து வயிறு எரிந்து கூவிக் கதறுகின்றார் ஒரு கிழவர். "அட பாவிகளே! ஏனடா இப்படித் தமிழைக் குட்டிச்சுவராக் கித் தொலைக்கின்றீர்கள்! என்று அவர் கூவுவது கேட் கின்றது. பள்ளிக்குள் நுழைந்து பார்க்கின்றேன். தீண்டாமை நீங்கக் கோயிலைத் திறந்தால் பட்டினி கிடந்து உயிர் விடுவ தாக முழங்கிய பெரியவர். நடுப்பகலானதும் பருப்புச் சோற்றை விருப்புற்று உண்டதனை ஒரு பையன் தன் கட்டுரையில் எழுதிக் காட்டுகின்றான். 'மறைந்து. அவர் உள்ளே சென்று உண்டார்" என்று சொற்களைப் பிரித்துப் பிரித்துப் பையன் எழுதியதுதான் இந்த ஆசிரியரின் கண்ணை யும் கருத்தையும் குத்திக் குலைத்துவிடுகின்றது. இதுகண்டே வயிறு எரிகின்றார் இந்தத் தமிழிலக்கணப் புலவர். கருத் தினைப்பற்றிய கவலை இந்தக் கருந்தமிழ்ப் புலவருக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/27&oldid=1480342" இலிருந்து மீள்விக்கப்பட்டது