உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ் மணம்

கடமையே நோக்கமாகச் செய்து வாகை சூடுதல்வேண்டும். “செய்வன திருந்தச் செய்”; “சீர்பெற நில்” - இவையே நமது மதமாதல் வேண்டும். அவ்வாறாயின், பல ஐன்ஸ்டைன்களும், பல ஷேக்ஸ்பியர்களும். பல காந்திகளும், பல கலியாணசுந்தரனார்களும், பல டால்டன்களும், பல எடிசன்களும் வாழுமிடமாகத் தமிழ்நாடு உலகின் உயிர்நிலையாகும். அவனது தமிழினை உலகம் போற்றும்; வாழ்த்தும், அவன் பாட்டினை உலகம் பாடும். அவன் எழுத்தினை உலகம் ஓதும். அன்றே, தமிழ், உலகப் பொதுமொழியாகும்; தமிழ்நாடு உலகில் உயர் தனிநாடாகும். தமிழா, என் ஆசை நிறைவேறும்! நிறைவேறுதல் உன் கையில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/26&oldid=1837677" இலிருந்து மீள்விக்கப்பட்டது