பக்கம்:தமிழ் மணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4. என் ஆசை 'ஆசைக்கோர் அளவில்லை." வீண் ஆரவாரமும் பெருமை பேசிக்கொள்வதும் இழிவின் அறிகுறிகளாம். உலகம் போற்றத் தமிழன் வாழவேண்டும். அதுவே என் பேராசை. எல்லாத் துறைகளிலும் தமிழன் உலகிற்குதவினா லன்றோ அவன் பெயர் உலக மக்களின் நாவில் உலாப்புறம் போதல் கூடும்! பழம்பெருமை பேசுவதால் பழைய மக்களது பெருமையும். இன்றைய மக்களது சிறுமையுமே வெளி யாகும். ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டின் உயர்வும். தமிழின் சீரும் தன்னாலேயே வாழும் அல்லது தன்னாலேயே வீழும் என உறுதியாக நம்பித் தமிழின் ஒப்புயர்வற்ற உட் கோளுக்கேற்ப வாழ முற்படுதல் வேண்டும். உரிமையே தமிழனது உயிர்ப்பு: எத்துறையிலும்,எங் கும் அது வாழவேண்டும். அன்பே தமிழனது உயிர்: அதன் உண்மையை உலகம் அறியுமாறு செய்தல்வேண்டும். அறிவே தமிழனது வடிவம்: அறிவுலகைப் படைத்தல்வேண் டும். அஞ்சாமையே அவனது வீறு: அதன் திறத்தை உலகு அறிதல்வேண்டும். கலையே அவனது கோயில்: அவ் வழிபாடு சிறக்கவேண்டும். பண்ணிசைந்த பாவே அவனது ஒலி; அத் தமிழ் முழக்கம் உலகெங்கும் பரவி, இன்பத்தை ஊட்டு தல் வேண்டும். தொண்டே அவனது இயக்கம்: அன்பொழு கும் அறிவுத் துறையில் அந்தக் கனிந்த தொண்டு, விஞ்ஞான முறையே, காற்றிலும், தரையிலும், கடலிலும் இயற்கையோ டியற்கையாக, பெருங்கலையாக இயைந்து, இன்பத் துறக்க மாக - வீடே உண்மை வீடாக - ஆக்கவேண்டும். 'அ,ஆ ' என எழுதத் தொடங்குநாளில் இருந்து இந்தத் தமிழ்நிலை யில் ஒவ்வொரு தமிழ்க் குழவியும் வாழ முந்தவேண்டும். குப்பை வாரும் தொழிலேயாயினும் ஒப்புயர்வின்றிக் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/25&oldid=1480340" இலிருந்து மீள்விக்கப்பட்டது