பக்கம்:தமிழ் மணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 தமிழ் மணம் உரிமை வேட்கை பிறந்ததும் இவற்றைத் திரட்டி வெளி யிடும் முயற்சியில் தமிழுலகம் ஈடுபட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதற்பட்டம் பெற்ற தாமோதரம் பிள்ளை தொல்காப்பியமும் கலித்தொகையும் சூளாமணியும் அச்சேறி உலாவக் கண்டார். தொல்காப்பிய உரையிற் சங்கப் பாக்களே எடுத்துக்காட்டுக்களாக வருகின்றன. அவற்றின் உண்மை வடிவத்தினைக் கண்டாலன்றோ தொல் காப்பியத்தினை உள்ளவாறு உணர்ந்தவர் ஆவோம்? சங்க நூல்கள் அன்றோ நம் பழைய வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டுகின்றன? இந்திய நாட்டுப் பேச்சுமொழிகளின் மிக மிகப் பழையது தமிழே ஆகும். ஆதலின், பழந் தமிழ்நூல்கள் நம் பழம்பெரு வரலாறாகும். பத்துப்பாட்டும், புறநானூறும். பரிபாடலும், பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும், குறுந் தொகையும் தமிழ்த் தாத்தா புதியனவாகக் கண்டெடுத்துத் தந்த பழம் புதையல்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகை யுமே சங்கப் பாக்கள். இந்தப் பதினெட்டு மேற்கணக்கு நூல்களில் பதினைந்தும் இவர் அச்சிட்டன. இவருடைய பதிப்புக்களே இவர் சிறப்பினைப் பேசும். இத்தனையும் இவர் பதிப்பித்தது நம்முடைய நல்ல காலம். ஏடுகளைப் படிப்பதே ஒரு கலை. புள்ளியில்லாமல் "தொல காப்பியம் என்பதனைத் 'தொல்காப்பியம்' என்று படிப்பது எளிதா? 'Ilampuranam' என்று ஆங்கில எழுத்தில் எழுதப் பெற்றதனைத் தமிழ் எம்.ஏ. பட்டப் பரீட்சைக்கு எழுத விரும் பிய ஒருவர் 'இளம்புராணம்' என்று படித்துவிட்டுக் கடை யெல்லாம் கேட்டலைந்தார் என்றால், இதனினும் அருமை யாகப் புள்ளியில்லாத எழுத்துக்களைப் படிக்கும் கலையின் அருமையை என்னென்று சொல்வது? இவற்றைப் படிப்பது ஒருபுறம் இருக்கட்டும். படிக்க ஏடுகள் வேண்டாவா? பேரே தெரியாமல் பரணைமேல் கிடக்கும் ஏடுகளை எவ்வாறு அறி வது? ஊர் ஊராகச் சுற்றினார் தமிழ்த் தாத்தா. போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/38&oldid=1480444" இலிருந்து மீள்விக்கப்பட்டது