பக்கம்:தமிழ் மணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழுக்கு உழைத்த தாத்தா 39 இடத்தில் எல்லாம் ஏடுகள் உண்டா என்றுமட்டும்தான் கேட்கமுடியும். இருந்தால், எல்லாவற்றையும் புரட்டித்தானே பார்க்கவேண்டும்? கலம் உமி குத்திக் கைப்பிடி நெல் காண் பதுபோலவே முடியும் இந்த ஏட்டு வேட்டை. கலம் குத்தி மணியே காணாது. கையும் கண்ணும் நொந்து திரும்புவதும் உண்டு! தாமறிந்த பெரியாரிடம் இவர் கேட்டுப் பெற்ற பரிசில் என்ன? அவர்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஒருசில ஏடுகளைப் பெற்றதேயாம். இதே இவற்றை எல்லாம் ஒருமுறைக்குப் பலமுறை ஓதுவதே இவர் வாழ்வு. ஒருநாளா,பொழுதுபோக்கா? வாணாள் எல் லாம் இதே உழைப்பு! உயிர் பிரியும் வரை இதே உழைப்பு! காலையில் எழுவது முதல் இரவு துயிலும் வரை உழைப்பு! உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? பதிப்பித்த நூல்களைமட்டுமா அறிகிறோம்? ஒப்புமைப் பகுதி என்று இவர் காட்டுவனவற்றின் வழியே பிற நூல்களையும் அறிகிறோம். இவர் சங்க நூல் இவர் நேரே தொல்காப்பியத்திற்கோ களுக்கோ போகவில்லை. பழைய மரபின்படியே அந்தாதி. கலம்பகம், கோவை, புராணங்கள், ஐந்திலக்கணம் என்ற இவற்றின் வழியே தமிழறிந்தார். அந்தநாளைய மரபின்படி தமிழ் வளர்த்துப் புராணம் பாடிய மீனாட்சிசுந்தரம்பிள்ளை யவர்களிடம் பாடங் கேட்டுப் பாட்டெழுதிப் பழகினார்.புரா ணம் பாடுவதற்கும், புராணம் பாடப்போகும் ஊரின் வர லாறுகள் கதைகள் பாடல்கள் முதலியவற்றைக் கேட்டறிய வேணடும் அன்றோ? அந்தப் பழக்கம் தமிழ்த் தாத்தாவின் உடலில் ஊறிவிட்டது. பலரறியாத பாட்டுப் பாடினாலும் பலரும் அறிந்த கதைகளையும் பாடல்களையும் அறிந்து பலரோடும் தமிழில் திளைக்கின்ற வாய்ப்பினை முழுதும் இவர் பயன்படுத்திக்கொண்டார். 'கண்டதும் கேட்டதும்' என்று று இவர் எழுதிய நூல், இவை எல்லாம் அவருடைய தமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/39&oldid=1480442" இலிருந்து மீள்விக்கப்பட்டது