பக்கம்:தமிழ் மணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 தமிழ் மணம் ழாராய்ச்சிக்கு உதவியதனையும் அவருக்குத் தமிழ் என்றால் ஏற்பட்ட ஈடுபாட்டினையும் நன்கு விளக்குகிறது. அந்தாதி முதலிய நூல்களில் உள்ள சுவையினையும் எடுத்துக்காட்டிப் பின்னே நம்மையும் சுவைக்குமாறு இவர் செய்கின்றார். பின்வந்த இலக்கியங்களுக்கெல்லாம் பிறப்பிடமாக அமைந்த சிந்தாமணியே இவர் முதல்முதல் பதிப்பித்தது. சைவ மடத்தில் பழகியவர் சமண நூலைப் பதிப்பிப்பது அந்நாளைய வியப்புக்களில் ஒன்று. தமிழன்றி வேறு ஒன்றி லும் ஈடுபடாதவ ராகையால் அவருக்கு ஈது ஒன்றும் வியப் பில்லை. நச்சினார்க்கினியர் சைவராயினும் சிந்தாமணிக்கு உரை எழுதவில்லையா? அவர் பரம்பரையில் வந்தவரே தமிழ்த் தாத்தா. நச்சினார்க்கினியர் சிந்தாமணிக்கு மட்டுமா உரை எழுதினார்? பத்துப்பாட்டுக்கும் உரை எழுதினார். பத்துப்பாட்டிலும் தமிழ்த் தாத்தாவின் மனம் சென்றது. சிந்தாமணியை ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்றென்றால் சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற மற்றைய இருபெரும் காப்பியங்களிலும் மனம் செல்லாதா? மிகுதிநின்ற வளையா பதியும் குண்டலகேசியும், எவ்வளவு முயன்றும் கைக்கு எட்ட வில்லை. நச்சினார்க்கினியர் உரை என்றால் எட்டுத்தொகை நூல்களும் அங்கே காட்சியளித்துக் கருத்தைக் கவரும்; பெருங்கதை என்ற நூலும் எடுத்துக்காட்டாக வரும். கொங்குவேளின் இலக்கியச் சுவைப் புதையலையும் தேடிக் கொணர்ந்தார் தமிழ்த் தாத்தா. ஒருசில பகுதிகளே கிடைத் தன. இருந்தாலும், என்ன சுவை! என்ன சுவை! க தமிழ்த் தாத்தா பழைய இலக்கண நூல்களையும் வெளி யிட்டார். ஐயனாரிதனாருடைய புறப்பொருள் வெண்பாமாலை இல்லையானால் புறநானூற்றின் துறைகளை அறிவது முடி யாது. நன்னூலின் பழைய உரைகளையும் ஐயர் அவர்கள் பதிப்பித்து இலக்கண வரலாற்றினை நாம் உணருமாறு செய்தார். கௌடப் புலவன். கவிராக்ஷசன். கவிச்சக்கர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/40&oldid=1480440" இலிருந்து மீள்விக்கப்பட்டது