பக்கம்:தமிழ் மணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8. தமிழ் வளர்கிறதா? 'கன்னித் தமிழ்," "என்றுமுள தென்தமிழ், என்று புலவர் போற்றினர். இன்றும் இவற்றை மறைமொழியாக வையாமல் மேடைகள் முழங்குகின்றன. நம்மைப் புகழ்ந்து கொள்வது நாகரிகம் அன்றுபோலும்! ஆனால், தற்புகழ்ச்சியில் விருப்பம் இல்லாதவர் யார்? எனவே, நம்மைப் புகழ்ந்து கொள்வதற்குப் பதிலாக, நம் தமிழை வானளாவப் புகழ்கின் றோம். ஆனால், இது பெரும்பான்மையும் பழமையைப் பாரர்ட்டுவதாக முடிகின்றது. சிலபோது இன்றைய நிலைக்கு இரங்குவது ஆகவும் அப் பழம்புகழ்ச்சி மாறுகின்றது. தமிழரை விட்டால் தமிழ் எங்கே உண்டு? ஓலையிலா? கல்வெட்டிலா? அப்படியானால். செத்தொழிந்த பழைய எகிப்து மொழியும் கல்வெட்டில் வாழ்கிறது எனல்வேண்டும். கல்வெட்டும் கண்டு எடுத்து ஒதுவார் நாவில் அன்றோ வாழ் கிறது? எனவே, தமிழ், தமிழன் நாவில் தவழ்ந்து விளை யாடும் கலைமகளாம். தமிழனே அதனைப் படைக்கும் கடவுள். பேசுந்தோறும் இந்தப் படைப்பு நிகழ்கிறது. மந்திரத்தை நாவும் அசையாமல் உள்ளுக்குள் நவிலுதலும் உண்டு; அதற் குப் பதிலாக எழுதுவதும் உண்டு. அதுபோலத் தமிழும் அவ்வாறு வழங்கினாலும், அடிப்படை, நாவில் எழும் பேச்சே ஆம். தமிழ் பேசும் மொழியாக உள்ளவரையிலும் வாழ் கிறது. வளர்கிறது என்றே கூறவேண்டும். ஆனால். இத்தகைய வளர்ச்சி எல்லா மொழிகளுக்கும் உண்டு. உயிராக இருக்கும் நிலையே அன்றி, வாழ்வு என்று இதனை உயர்த்திப் பேச முடியாது. கம்பன்தமிழ் வாழ்ந்தது எனலாம். ஆங்கிலம் பல நாடுகளிலும், வாழ்க்கைத் துறை கள் பலவற்றிலும் தங்குதடையின்றி வாழ்கிறது. அவ் வாழ்வின் சிறப்பால் அதனை அனைவரும் போற்றிக் கற்கின் றனர். அத்தகைய நிலையில் தமிழ் வளர்கிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/44&oldid=1480437" இலிருந்து மீள்விக்கப்பட்டது