பக்கம்:தமிழ் மணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் வளர்கிறதா? 45 எல்லையைக் கண்டால் இந்த நிலை உண்டா? வடவேங் கடம் தென்குமரி கிழக்கும் மேற்கும் கடல் என்ற நிலை தொல்காப்பியர் காலத் தமிழகத்தின் எல்லையாம். இன்று மிகக் குறுகிவிட்டது தமிழ்நாடு. ஆனால், தமிழ் பேசுவார் எண் ணிக்கை அன்றினும் மிகுதியே எனலாம். தமிழ் பேசுவார், இலங்கையிலும். கீழைக்கடல்நாடுகளிலும், தென் ஆப்பிரிக் காவிலும் பரவி உள்ளனர். அவர்கள் கூலித்தமிழர். அரி யுணையில் வீற்றிருந்தது தமிழ் என்று குமுறுகிறது தமிழ் உள்ளம். என்றாலும், காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு. எழுதப் படிக்கத் தெரிந்த தமிழர் தொகை நூற்றுக்கு இருபத் தைந்து அளவிலும் இல்லை. என்றாலும், பத்திரிகை உலகில் தமிழ் முன்னேறியே வருகிறது; தமிழ் நூல்களும் அழகான நிலையில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. நூல்நிலையத் தில் நூல்களைப் படிக்கும் வழக்கம் ஆந்திர நாட்டில் சிறந் துள்ளது என்றால், தமிழ்நூல்களை அவ்வாறு பொது உடைமையாகக் கொள்வதில் மனமின்றித் தனிஉடைமையாக வாங்கி வைத்துத் திளைக்கவே விரும்புகிறது தமிழ்நாடு எனல்வேண்டும். ஆனால்,நினைத்ததுபோல வாங்கக் கையில் பணம் உண்டா? தாய்நாடு விட்டுக் கூலிகளாக அரசியலார்க் கும் தெரியாமல் கள்ளத் தோணியில் கடல் கடப்பார் கையில் பணமேது? "தமிழன் வாழ்ந்தாலன்றித் தமிழ் வாழ்வது எங்கே?' என்ற பல்லவியையே திருப்பித் திருப்பிப் பாடவேண்டும். இன்று நாடு உரிமை பெற்றுள்ளது. சென்னை நாட்டின் அர சியல்மொழியாகத் தமிழ் இன்று உயர்ந்துள்ளது; உயர்நிலைப் பள்ளிகளின் கல்விமொழியாகவும் வாழ்கிறது; தமிழ் மேடை யின் முழக்கமாகவும் உள்ளது; ஆனால்,கல்லூரி மொழியாக வளரவில்லை; அரசியல் துறைகள் பலவற்றிலும் பழக்கத் தில் வரவில்லை; இங்கெல்லாம் வாழும் நாள் விரைவில் வரு வதில் ஐயம் இல்லை. ஆனால், பிறமொழிகளைப் பயிலாத நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/45&oldid=1480438" இலிருந்து மீள்விக்கப்பட்டது