________________
46 தமிழ் மணம் என தமிழனுக்கு உண்டா? இந்திய மொழிகளில் ஒன்றாகிய இந்தியோடு வாழ்வுக்கே போராடவேண்டியுள்ளது மனம் ஏங்குவார் பலர். இந்தி இல்லையானாலும் ஆங்கிலம் கல்லாமல் இருப்பதற்கு இல்லை. பிறமொழி பயிலுவது- சிறப்பாக ஆங்கிலம் போன்ற உலக மொழிகளைப் பயிலு வது - அடிமைகளாக அன்றி உரிமை பெற்றவர்களாகப் பயிலுவது - கட்டாயத்தால் அன்றி விரும்பிப் பயிலுவது- தாய்மொழிக்குக் கேடாகாது ஊட்டமாகவும் முடியலாம். ஆங்கிலம் வாழ்கிறது என்றோம். எல்லாக் கலைகளும் அம்மொழியில் திளைத்துச் செருக்கிக் கூத்தாடுகின்றன. அம் மொழி கற்றார் அதன் வழியே எல்லாம் அறிதல் கூடும். இக் கலைகள் தோன்றிய நாள் முதல் ஆங்கில மொழி அவற்றைப் பேசிவருவதால் இங்கு ஒரு புதுமையும் இல்லை. ஆனால் தமிழோ? தமிழனைப் பாருங்கள். மிகமிகப் பின்தங்கிவிட் டான்; அவற்றைக் கற்ற தமிழரும் அவற்றை ஆங்கிலத்தி லேயே கற்றனர். அவற்றைத் தமிழில் பேசச் சொல்லின்றித் தடுமாறுகின்றனர். இது, கற்றோர்கள் நிலையே அன்றி மற் றோர்கள் நிலை அன்று. பணியாட்கள் தமிழில் அன்றி வேறு எதனில் பேச முடியும்? ஆங்கிலப் பெயர்களை அப்படியே தங்களால் முடிந்த அளவு ஒலித்துத் தமிழிலேயே பேசுகிறார் கள். இதனைப் பார்த்து மகிழப் பலருக்குக் கண் இல்லை; கேட்டுக் களிக்கக் காது இல்லை: இது தமிழ் இல்லை என்கின் றனர் தமிழ் அறிஞர். அவர்கள் விரும்பும் தமிழ் அன்று, என்பது உண்மையாகலாம். இருந்தாலும் தமிழே தமிழே தமிழே ஆம். தமிழனை விட்டுத் தமிழினைக் காணும் முயற்சி வீண் வீண் வீண். இப்படித்தான் தமிழ் வளரும்; தமிழ் வாழும் என உணர்தல் வேண்டும். ஆங்கில நூல்களிலும் கலைநூல்கள் இப்படித்தான் உள்ளன. இதனை அறிந்தால் மட்டுமே இந்த நிலையினைத் திருத்தியும் புதுக்கியும் உதவ முயல்வோரும் உதவ முடியும். கம்பனும் தமிழன்; கூலியும்