பக்கம்:தமிழ் மணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் வளர்கிறதா? 47 தமிழன். கூலியைக் கண்டு குருடராகவேண்டுமா? கம்பன் என்று களித்து நிற்கவேண்டாவா? கூலி என்றேனும் கரைந்து குழைந்து கண்ணீர் சிந்தவேண்டாவா? கம்பன்தமிழ் வாழ வேண்டாவா? ஆனால். எங்கும் கம்பன்தமிழ் வாழ்ந்தால் வாழ்வு என்ன ஆகும்? பத்திரிகை எல்லாம் பாட்டு! அலுவ லகம் எல்லாம் அடுக்குமொழி! விஞ்ஞான நிலையமெல்லாம் கற்பனைக் களஞ்சியம்! தொலைபேசி எல்லாம் எதுகை மோனை! - இவ்வாறு இருந்தால், உலகம் நடைபெறுமா? "தமிழனுக்கு ஏற்ற தமிழ்" என்பதே மந்திரம். அவ்வத் துறைக்கு ஏற்ற தமிழே அங்கங்கே வாழவேண்டும். ஆனால். கம்பன் தமிழும் வாழாமலா நிற்கிறது? கம்பன் வழி வந்தவன் தானே பாரதி? கம்பனையும் உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டாகக் கொண்டார்களா? பழமை புதுமையை வரவேற்குமா? ஆனால், குடியரசு வந்ததும் பாரதியின் புகழும் மிகமிக ஓங்கி வளர்கிறது. பாரதி உயிர்வாழும்போதேயே உலகம் அவன் பாடலைப் பாடத் தொடங்கிவிட்டது. அதில் எழுந்த ஊற்றத்தால் காந்தி அடிகள்வழியில் நம் நாடு சென்று விடுதலையும் பெற்றது. நாட்டுப் பாடல் மட்டுமா பாடினார்? சீர்திருத்தம் மட்டுமா பாடினார்? வேதாந்தம் மட் டுமா பாடினார்? அவர் பாடிய கண்ணன் பாட்டு'ப் புதிய திருவாய்மொழி: 'பாஞ்சாலி சபதம்' புதிய இதிகாசம்; 'குயில் பாட்டு'க் குழந்தைகள் முதல் ஞானிகள் வரை பலரும் தத்தமக்கேற்ற வகையில் ஈடுபடும் காப்பியம். பாரதி பரம் பரை வற்றிவிட்டதா? பாரதிதாசன். கவிமணி முதலியோரது நூற்றாண்டில் தமிழ் வளரவில்லை என்றால், பின் என்று வாழ்நதது? வாழும்? அம்மட்டுமா? பாடுவதற்கே பாட் டென்பதனையும் அறிகிறோம். தமிழிசைப் பாடல்கள் முன் இல்லாமல் இல்லை. இடையில் மறந்த காலம் போய் இன்று புதுவாழ்வு பெற்று வருகிறது தமிழர் இசை. நாடோடிப் பாடல்களை நாட்டின் செல்வமாய்க் கொள்ளும் குடியரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/47&oldid=1480449" இலிருந்து மீள்விக்கப்பட்டது