பக்கம்:தமிழ் மணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 காலத்தில் இயல்பே ஆம். தமிழ் மணம் அந்த நடையிலும் நூல்கள் வெளிவருவது அச்சுப் பொறியே குடியரசின் கல்விப் பொறி. ஆனால், எதனையும் எளிதில் அச்சிடலாம். பகட்டே கண்ணைப் பறிக்கும் காலத்தில் தமிழிலும் சில ஏமாற்றம் எழலாம்: அஞ்ச வேண்டா. பெருவெள்ளம் புதிதாக ஆற்றில் வரும் போது காண்பது என்ன? என்ன குப்பை! என்ன நுரை! என்ன சேறு! என்ன கலக்கம்! என்ன ஆரவாரம்! இவற்றை வெறுப்பார் உண்டோ? ஆனால், கரையைக் காப்பது கடனாம். மேடைத் தமிழில் வளர்ச்சியை அறியாதார் யார்? தெருக்கள்தோறும் உங்கள் காதினைத் துளைக்கவில்லையா? கல்வி பரவாத நாட்டில் கேள்வியே மக்கள் அறிவினை வளர்த் தல் கூடும். பேச்சில் ஓர் உயிர் உண்டு: உணர்ச்சி, அளவுக்கு மேல் பொங்குகிறது. இன்று, ஒளியைவிடப் புகையும் சூடும் மிக்கிருக்கலாம். உண்மைக்கு என்று பேசுவது குறையலாம். அடுக்குச் சொற்களின் ஆரவாரம் அன்றி வேறு ஒன்றும் இல்லாமலும் போகலாம். இங்கும் புதுவெள்ளம் புரண்டு வருவதனையே காணல்வேண்டும். முதலில் சொல்லின் இனிமையில் மக்கள் ஈடுபடுவது இயல்பே ஆம். ஆற்றல் வளர்ந்தபின் தெளிவு எழுந்தே தீரும். இதனையும் இன்று நாம் காணாமல் இல்லை. தமிழ் முன்னறியாத வளர்ச்சி இங்கு எழுகிறது என்பதில் என்ன ஐயம்? திரு.வி.க.வின் தமிழ்ப் பேச்சும். தமிழ் எழுத்தும் எந்த காட்டு மொழிக்கும் குறைந்தன அல்ல. உரைநடை ஓர் இலக்கியம் என்பதனை அறியாதிருந்த காலமும் உண்டு. நாம் பேசுவது எல்லாம் உரைநடையில் அன்றோ? பத்திரிகைகளின் வளர்ச்சியால் பல கருத்துக்களை யும் விளக்கும் ஆற்றலையும் நுட்பத்தினையும் தமிழ் பெறு கின்றது. மொழிபெயர்ப்பு முறையும் இந்த விரைவுக்கும் கட்டாயத்திற்கும் ஏற்ப வளர்கிறது. வானொலி வழியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/48&oldid=1480450" இலிருந்து மீள்விக்கப்பட்டது