பக்கம்:தமிழ் மணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் வளர்கிறதா? 49 இந்த உரைநடை காதுக்கு உவந்ததாகிச் செறிவும் திட்பமும் உடையதாய் வளர்வதோடு பரந்த கருத்துக்களைப் பலரும் அறியச் சுருங்க விளக்கும் திறம் பெறுகிறது. முழுவதும் வெற்றி கண்டோம் என்று கூறுவதற்கு இல்லை: ஆனாலும். வளர்ச்சியைக் காணாமல் இல்லை. உலகத்தினை ஒன்றாக்கி விளக்கும் இந்த உரைநடை குழந்தைகளையும் மகிழ்விக்க இன்று தொடங்கி உள்ளது. "குழந்தைகள் இலக்கியம்" ஒரு புத்தம் புதுமுயற்சி. பாடபுத்தகங்கள் மட்டும் அல்ல இங்கு வருவன. அவற்றில் ஒரு பகுதியே இலக்கியம் எனத் தக்கது. இதுவரை முதி யோர் இலக்கியத்தையே அவர்களுக்கு வழங்கிவந்தோம். இப்போது குழந்தைகளுக்கு என்றும், இளைஞர்களுக்கு என் றும் பாடல்களும், கதைகளும், விளக்கங்களும் படங்களோடும் சுவையோடும் அவர்கள் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் வெளிவரக் காண்கிறோம். அவர்கள் மனநிலையை யும் மொழிப் பாங்கினையும் ஆராயும் ஆராய்ச்சியின் பய னாகவே இவை வளர்தல் கூடும். நாவல்கள் முன்போல மொழிபெயர்ப்புக்களாகவும் தழு வல்களாகவும் அன்றிப் புதிய தமிழ்ப் படைப்புக்களாகவும் வெளிவருகின்றன. சிறந்த மொழிபெயர்ப்புக்களும் பலப் பல திறத்தில் வரக் காண்கிறோம். இவற்றில் எவை வாழும் என்று இப்பொழுது எவ்வாறு கூறுவது? சிறுகதைகளிலும் தமிழன் பின்னணியில் நிற்கவில்லை. சில கதைகள் நிலைத்து என்றும் வாழும் என்பதில் ஐயம் இல்லை. இங்கும் வெள்ளத் தினைக் கண்டு நாம் அஞ்சவேண்டுவது இல்லை. இன்று நாடகம் பல எழுந்தாலும், என்றும் வாழும் நாடகங்கள் எவை என்று கேட்கலாம்? இந்தப் புதிய துறை யில் நுழைந்து அதன் சிக்கல்களை அறிந்து திகைப்பின்றி இயங்குவதே பெரிய வளர்ச்சியாம். இங்கே வழிகாட்டியவர் திரு. சம்பந்த முதலியார் ஆவர். புதிய விஞ்ஞானப் போக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/49&oldid=1480451" இலிருந்து மீள்விக்கப்பட்டது