பக்கம்:தமிழ் மணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 தமிழ் மணம் கினை எல்லாம் பயன்படுத்தி உலகினை மயக்கும் வெள்ளித் திரையிலும் வளருவது நாடகமே ஆம். ஆனால், அங்கே எல்லாம் பாடலாய். உணர்ச்சியின் ஆரவாரமாய், அடுக்குத் தொடர்களாய் வருவது கண்டு அஞ்சவேண்டா. முத்தமிழ் வளர்கிறது; வழிதுறை அறிகிறது. ஓரங்க நாடகங்கள், பள்ளி நிலையங்களில் வளரவில்லையா! கண்ணாலேயே பாரா மல் காதால்மட்டும் கேட்டு மகிழும் வானொலி நாடகம் ஒரு புதுமை! கற்பனையிலே அனைத்தினையும் காணும் புதுமைக்கு ஏற்ற நுண்ணிய ஒலிவேறுபாட்டினையும், இனிமையினையும். ஆற்றலினையும் இடத்திற்கேற்பத் தமிழ் பெற்று வளர்கிற தன்றோ? கலைகளை வளர்க்கும் தமிழும் வளரவில்லையா? 'கலைக் கதிரே அந்த வளர்ச்சிக்கு நிலைத்துவிட்ட ஒரு சான்றாகும். வரலாறுகள் - உள்ளத்தியற்கை - இலக்கிய ஆராய்ச்சி - ஒவ் வொன்றாகக் கூறுவானேன்?-- எல்லாத் துறையிலும் தமிழ் ஓடி விளையாடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/50&oldid=1480452" இலிருந்து மீள்விக்கப்பட்டது