பக்கம்:தமிழ் மணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9. இந்திய மொழிகளில் தமிழ் மணம் விடுதலைக்குப்பின இந்தியா பண்பாட் டொருமைப்பாடு பெற்றுவருகிறது. ஒரு மொழியில் உள்ளதனை மற்றைய மொழியில் தரத் துரைத்தனமும் முயல்கிறது. திங்கள் வெளியீடு முதலியனவும இத்தொண்டில் ஈடுபடுகின்றன. 'செக்' மொழியிலும், ரஷ்ய மொழியிலும் தமிழ்ச் செய் யுள்களும் கதைகளும் மொழிபெயர்ப்பு வடிவில் வரும்போது இந்திய மொழியில் வருவதனைக் கூறவேண்டுமா? போப்பின் திருவாசகம். திருக்குறள், நாலடியார் முதலியவற்றின் மொழிபெயர்ப்புப் போன்றவை இங்கிலாந்திலும், ஆங்கிலே யர் ஈடுபாட்டிலும் எழுவதுமட்டும் அருமையாகிவிட்டன. தமிழிலிருந்து மொழிபெயர்த்து இந்திய மொழிகளில் வெளிவந்த நூல்களில் தலைசிறந்தது திருக்குறள். அது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளம், இந்தி முதலிய மொழிகளில் வெளிவந்துள்ளது. பாரதியின் பாடல்களும் கதைகளும் இவ்வாறு வெளிவருகின்றன. திருப்பனந்தாள் மடத்து முயற்சியின் பயனாகச் சைவ சித்தாந்த நூற்கள் இந்தியில் நடையாடக் காண்கிறோம். விடுதலைக்கு முன்னரே எழுந்த முயற்சி, பின்னே பெரும்பயனாக விளைந்தது ஒன்று உண்டு. அதுவே தெலுங்குச் செய்யுள் வடிவில் வந்த கம்பராமாயண மொழிபெயர்ப்பு. கம்பனை மொழிபெயர்ப் பது அருமை. எனினும், தெலுங்கு அறிந்தவர்களுக்குக் கம்பனை ஒருவகையில் அறிமுகம் செய்வதற்கு இஃது உதவும் என்பதில் ஐயமில்லை. கம்பராமாயணம், தோன்றிய நாள்முதல். மக்கள் மனத் தினைக் கவர்ந்துவரும் சிறந்த இலக்கியம். வைணவர்கள் கம்பனைத் தம் பேருரைகளில் 'தமிழன்' என்று வள்ளுவ ரோடு ஒருங்கு வைத்துப் பாராட்டுவார். வான்மீகியின் பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/51&oldid=1480453" இலிருந்து மீள்விக்கப்பட்டது